சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு.. மாமன்னன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சென்னை: மாமன்னன் திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு எனவும் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்றும் நடிகர் ரஜினிகந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்து இருக்கும் இந்த படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக வடிவேலு நடித்து இருக்கிறார்.

காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான இருக்கும் மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி எப்படி மிக உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் க தை. இந்த படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது. மாமன்னன் திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தன்பாலை நினைவு படுத்துகிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மாமன்னன் படத்தை அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர்.
மாமன்னன் திரைப்படத்தை திரைப்பிரபலங்களும் பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் மாமன்னம் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துஇருக்கிறார். ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications