பாஜகவின் ஏவல்துறையான அமலாக்கத்துறை... சோதனையை கண்டு அச்சமில்லை.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதைக்கண்டு பாஜக எரிச்சல் அடைந்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனி வீடு, எழும்பூர், பெசன்ட் நகர் மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவகங்கள் என 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அமலாக்கத்துறையினர் நடத்தும் சோதனைக்கு திமுகவினரும், கூட்டணி கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இன்று எதிர்கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையானது பாஜகவின் ஏவல்துறையாக மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். கடந்த 13ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்கில் இப்போது சோதனையும் விசாரணையும் நடைபெறுகிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய ஆபத்தாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜக ஆட்சியை அகற்ற எதிர்கட்சியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். எதிர்கட்சியினரின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது பாஜக, பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சியினர் கூட்டத்தை திசை திருப்ப பாஜக முயற்சி செய்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications