Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படையப்பா சிவாஜி மாதிரி ஆகிடுச்சே.. வாழ்ந்து கெட்ட அமலாக்கத்துறை?.. EDக்கு அடுத்தடுத்து விழும் இடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: படையப்பா படம் இப்போது ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.. அந்த படத்தில் பிரம்மாண்டமாக வாழ்ந்த சிவாஜி குடும்பம் சொந்த வீட்டை இழக்க.. அந்த வீட்டின் தூணில் சிவாஜி கட்டிப்பிடித்து அழுவார்.. வாழ்ந்து கெட்ட குடும்பத்தை கண் முன் நிறுத்த அந்த காட்சி நல்ல உதாரணம்.. அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பமாக மாறி உள்ளது அமலாக்கத்துறை!

கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறைக்கு போதாத காலம். அமலாக்கத்துறை வந்தாலே.. ஐயோ அய்யாசாமியா.. ஓடுங்கடா என்று பயந்தது போய்.. வா வா வந்து வண்டியில் ஏறு என்று தமாசாக டீல் செய்யும் சூழல் வந்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக சமீப காலங்களில் கோர்ட் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமலாக்கத்துறையின் அதிகாரம் கேள்வி எழுப்பப்படுகிறது, அமலாக்கத்துறையின் வரம்புகள் கேள்வி எழுப்பப்படுகிறது, அமலாக்கத்துறையின் மீதே லஞ்ச புகார்கள் வைக்கப்படுகின்றன, அவர்கள் முன்பு எடுத்த நடவடிக்கைகள் கூட கோர்ட் மூலம் நீக்கப்படுகிறது. அந்த வகையில்தான் அமலாக்கத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இரண்டு சம்பவங்கள் கடந்த 1 வாரத்தில் நடந்து உள்ளது.

Enforcement directorate facing pressure and heat from court now a days What is happening

ராகுல் காந்தி வழக்கு

தேசிய ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் பெரும் நிவாரணம் அளித்துள்ளது. ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி (PC சட்டம்) விஷால் கோக்னே, அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை அளித்த புகார் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி விளக்கினார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் அமைந்ததே அன்றி, முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையிலானது அல்ல என்பதால் நீதிமன்றம் இம்முடிவை எடுத்தது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி மட்டுமின்றி, சுமன் தூபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியன், டோட்டெக்ஸ் மெர்சண்டைஸ் மற்றும் சுனில் பண்டாரி ஆகியோரையும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. அமலாக்கத்துறையின் விசாரணை அரசியல் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக கூறி வருகிறது.

அதேசமயத்தில், இந்த வழக்கில் மோசடி மற்றும் பணமோசடி குற்றங்கள் தொடர்பான முக்கிய பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை வலியுறுத்தியது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்திற்குச் சொந்தமான ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் தவறாகக் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. சட்டக் குழு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பாய்வு செய்து புதிய மேல்முறையீட்டைத் தயாரிக்கும். இது சாதாரண தனிப்பட்ட புகார் அல்ல, ஏற்கெனவே நீதிமன்றம் இதை ஆய்வு செய்துள்ளது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. விஜய் மதன்லால் சௌதரி தீர்ப்பின் அம்சங்களை நீதிபதி புறக்கணித்திருக்கலாம் என்றும் அவை தெரிவித்தன.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு

இன்னொரு பக்கம் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் மன்னிப்பு கேட்டார் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அமலாக்கத்துறை வரலாற்றில் முதல்முறையாக உதவி இயக்குனரே மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனிடம் ஆவணங்களை பறிமுதல் செய்ததற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நீதிமன்ற உத்தரவை மீறி சம்மன் அனுப்பிய விவகாரத்தில், ஒரு உதவி இயக்குநர் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரி உட்பட மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் முன்பு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில்தான் இன்றுஅமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விகாஷ் குமார் - மதுபான வழக்கு

ரூ.1,000 கோடி டாஸ்மாக் மதுபான ஊழல் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட பணமோசடி வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்த நீதிமன்ற இடைக்கால உத்தரவை அமலாக்கத்துறை மீறியதே இந்த அவமதிப்புக்குக் காரணம். இந்த உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் விகாஸ் குமார், தீர்ப்பளிக்கும் அதிகாரி மற்றும் பதிவாளர் ஆகியோர் டிசம்பர் 15 அன்று (இன்று) ஆஜராகுமாறு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் அதிகாரிகள் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் வியப்புடன் வினவினர். "சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு அனுப்பப்பட்ட அசல் சட்டப்பூர்வ அறிவிப்பு அவர்களின் தனிப்பட்ட ஆஜரை கட்டாயப்படுத்தி உள்ளது. இதன்படி அவர்கள் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை?" என்று அமர்வு கேள்வி எழுப்பியது.

இது, டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதுபான ஊழல் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதி. இவ்வழக்கில், அமலாக்கத்துறை திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தது.

சீல் வைக்கும் அதிகாரம் இல்லாத அமலாக்கத்துறை

அலுவலகங்களைப் பூட்டி சீல் வைக்கும் அதிகாரம் இல்லாத அமலாக்கத்துறைக்கு, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆகாஷ் பாஸ்கரனிடம் திருப்பித் தருமாறும், அவற்றின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுகளை மீறி அமலாக்கத்துறை பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியது. இதனால், ஜூலை 23 அன்று உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், தேவைப்பட்டால் அவமதிப்பு மனு தாக்கல் செய்ய பாஸ்கரனுக்கு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையிலேயே அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டார் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அமலாக்கத்துறை வரலாற்றில் முதல்முறையாக உதவி இயக்குனரே மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+