நடிகைகள் + போதைப்பொருள்! தப்பி ஓடிய உதயநிதி பினாமி! துபாய் பறந்த அமலாக்கத்துறை! திருச்சி சூர்யா ஷாக்
சென்னை: உதயநிதியின் கருப்பு பண முதலைகள் நடத்தும் பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுகின்றன. நடிகைகள் தாண்டி போதைப்பொருள்கள் நிறைய பயன்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேர பார் நடத்த இவர் லைசன்ஸ் வாங்கி உள்ளனர். இதில் வாரத்திற்கு 1 நாள் டீ பார்ட்டி நடத்துகிறார்கள். இது டீ பார்ட்டி எல்லாம் கிடையாது. டிரக்ஸ் பார்ட்டி, என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள். திருச்சியில் உள்ள ஒரு நபரின் வழியாக இவர்கள் எல்லாம் உதயநிதியிடம் நெருக்கம் ஆனார்கள். இவர்களை தேடி துபாய்க்கு ஒரு டீம் சென்றுள்ளது. மூன்று பேருமே தலைமறைவாகிவிட்டனர்.
ஒரு சார்ட்டட் கப்பல் மூலம் இவர்கள் துபாய்க்கு சென்றுள்ளனர். இதில் நடிகைகள் தாண்டி போதைப்பொருள்கள் நிறைய பயன்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேர பார் நடத்த இவர் லைசன்ஸ் வாங்கி உள்ளனர். இதில் வாரத்திற்கு 1 நாள் டீ பார்ட்டி நடத்துகிறார்கள். இது டீ பார்ட்டி எல்லாம் கிடையாது. டிரக்ஸ் பார்ட்டி. போதை பொருள் பிரச்சனை மிக மோசமாக உள்ளது.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்த சமயத்தில் அவரின் இடத்தை இந்த மூன்று பேருமே பிடித்துக்கொண்டனர். அதனால்தான் இப்போது அவர்கள் டாஸ்மாக் விவகாரத்தில் மாட்டி உள்ளனர். டாஸ்மாக் பணத்தில் பல கோடியை இவர்கள் சுருட்டி உள்ளனர். இவர்களை பிடித்தால் உதயநிதியை பிடிக்கலாம் என்று செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் கொடுத்த வாக்குமூலம் மூலம் இந்த ரூட்டை பிடித்து உள்ளனர். இதுவரை இந்த 3 பேரின் பெயரும் யாருக்கும் தெரியாது.. இப்போது தெரிய காரணமே செந்தில் பாலாஜிதான்.. அதனால்தான் செந்தில் பாலாஜியை இப்போது நெருக்கமாக உதயநிதி பக்ஸ் சென்றுவிட்டனர், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications