52 எப்ஐஆர்களை தூசு தட்டிய அமலாக்கத்துறை.. உதயநிதியின் மொத்த சர்க்கிளுக்கும் செக்.. தாமோதரன் பிரகாஷ்
சென்னை: திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான எல்லோரும் குறி வைக்கப்பட்டு உள்ளனர். முக்கியமான நபர்களை குறி வைத்து உதயநிதியை, ஸ்டாலினை குறி வைக்கின்றனர். 2011ல் இருந்து போடப்பட்ட 52 எப்ஐஆர்களை வைத்து இந்த விசாரணையை அமலாக்கத்துறை சோதனை செய்கின்றனர், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், துரைமுருகன், கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் என்று 5 அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் டார்கெட். அடுத்த டார்கெட் ஸ்டாலின். தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றிபெறவே முடியாது. என்ன செய்தாலும் ஆட்சியை பிடிக்கவே முடியாது.

அது பாஜகவிற்கே தெரியும். இதனால் தமிழ்நாட்டில் பாஜக ரெய்டு நடத்துகிறது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான எல்லோரும் குறி வைக்கப்பட்டு உள்ளனர். முக்கியமான நபர்களை குறி வைத்து உதயநிதியை, ஸ்டாலினை குறி வைக்கின்றனர். 2011ல் இருந்து போடப்பட்ட 52 எப்ஐஆர்களை வைத்து இந்த விசாரணையை அமலாக்கத்துறை சோதனை செய்கின்றனர். பழைய எப்ஐஆர்.. அதிமுக காலத்தில் போடப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் வழக்குகளை போடுகின்றனர்.
அதை வைத்தே விசாரணை செய்கின்றனர். இதில் தங்கமணி உள்ளிட்ட பழைய அதிமுக அமைச்சர்களும் சிக்கி உள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஆட்சி காலத்திலும் இதில் எப்ஐஆர் பதியப்பட்டது. ஆகாஷ் பாஸ்கர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ரத்தீஷ் வீட்டிற்கு செல்வார்கள். அடுத்து உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கும் செல்வார்கள். இதெல்லாம் நடந்தால் உதயநிதி கோர்ட்டுக்கு செல்வார்.

இதனால் விளைவுகள் எதுவும் இருக்காது. எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. 2011ல் இருந்து போடப்பட்ட 52 எப்ஐஆர்களை வைத்து இந்த விசாரணையை அமலாக்கத்துறை சோதனை செய்கின்றனர். திமுக மட்டுமா இதில் புகாரில் சிக்கி உள்ளது. அதிமுக தங்கள் பக்கம் யாரும் வர மாட்டார்கள் என்பதால் நிம்மதியாக இருக்கின்றனர், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு பின்னணி
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications