அண்ணாச்சிக்கு என்னாச்சு! சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: பண மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.
சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் மற்றும் ஆக்சிஸ் வங்கியில் 82 கோடி ரூபாய் கடனாகப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
போலி ஆவணங்கள் கொடுத்து அவர்கள் கடனை பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. கடந்த 2017இல் ஷோரூம் ஒன்றைக் கட்ட இந்தியன் வங்கியிடம் கடனாகப் பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த கடன் தொகையை அவர்கள் அதற்காகப் பயன்படுத்தாமல் வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரித்த அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் 234 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதற்கிடையே ஆக்சிஸ் வங்கியும் இதேபோன்ற புகாரை சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மீது அளித்திருந்தது.
இதையும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் இப்போது சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 66.93 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நகை கடை ஜப்தி செய்யப்பட்டது. இந்தியன் வங்கிக்குத் திருப்பி தராத கடன் பாக்கி குறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சொத்து ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications