லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல்! அமலாக்க துறை
சென்னை: லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இந்த சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ. 6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கோவை அடுத்துள்ள துடியலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீட்டில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தினர்.

அதிகாலையிலேயே இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மார்டினின் மருமகனும் விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனனின் சென்னை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அமலாக்கத் துறை தகவல்: இதற்கிடையே லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு குறித்து அமலாக்கத் துறை விளக்கமளித்துள்ளது. மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மேகாலயா என மொத்தம் 22 இடங்களில் நடந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல்: இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டரில் மேலும் கூறுகையில், "சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டலுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாகத் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 22 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்தது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டன. அதனுடன் ரூ. 6.42 கோடி வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
பின்னணி: கடந்த 2012 மார்ச் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 7.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோர் உடன் இணைந்து கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து நாகராஜன், மார்டின், மார்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் இதை கையில் எடுத்தது. இந்த வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் கடந்த 2022ல் முடித்து வைத்தது. அதை எதிர்த்து அமலாக்க துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம்: அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர், மேலும், வழக்கின் விசாரணையை தொடர உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்தே இப்போது இந்த ரெய்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications