பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில்.. ED அதிகாரிகள் ரெய்டு! திடீரென குவிந்த அதிகாரிகள்
சென்னை: இன்று தலைநகர் சென்னையில் அதிகாலை முதலே பல்வேறு இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சில நாட்கள் வரை அந்த ரெய்டு தொடர்ந்த நிலையில், மதுபானங்கள் கொள்முதல் உட்பட பல்வேறு விஷயங்களில் 1000 கோடி ரூபாய்க்கு அளவுக்கு முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகாரிகள் சோதனை
இதற்கிடையே அதிகாலை முதலே சென்னையில் சில டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளின் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகள் மட்டுமின்றி, அது சார்ந்த தொழில் செய்வோர், டாஸ்மாக் ஒப்பந்தம் எடுப்போர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல இடங்களில் சோதனை
தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, திநகர், சூளைமேடு, மணப்பாக்கம் பகுதிகளில் சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனாம்பேட்டை கேபிஎன் தாசன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்
ஆகாஷ் பாஸ்கரன் இப்போது தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்களில் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது வீட்டில் எதற்காக அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள் என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஆகாஷ் பாஸ்கரன் Dawn Pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சில படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், பின்னர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பராசக்தி, சிம்புவின் 49வது படம் என வரிசையாகப் பெரிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
சினிமா படங்கள்
கடந்தாண்டு தான் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சிகே ரங்கநாதனின் 3வது மகள் தாரணிக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். இவர் தயாரித்து வரும் பராசக்தி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. பொங்கலன்று விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அதே நாளில் பராசக்தி ரிலீஸும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை தொடங்கிய அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை பல மணி நேரமாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அமலாக்கத் துறை சார்பில் எந்தவொரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications