நடிகை மகாலட்சுமியின் கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சென்னை வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு
சென்னை: சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக பிரபலமடைந்ததை விட சோஷியல் மீடியாவில் அதிகம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிப்ட் உள்ளிட்ட சில படங்களை தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இவர் நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் இடையே நடந்த திருமணம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் வனிதாவுக்கும் ரவீந்தருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருமே விவாகரத்தானவர்கள் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் தங்களது அன்பு, காதலால் இருவருமே உடைத்தெறிந்தனர்.
அவ்வப்போது இருவரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர், கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார்.
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக போலி ஆவணங்களை காட்டி சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ.16 கோடி ரூபாய் வாங்கிவிட்டு பணத்தையும் கொடுக்காமல், திட்டத்தையும் தொடங்காமல் ரவீந்தர் ஏமாற்றியதாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஒரு மாத சிறை தண்டனைக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் பெற்ற ரவீந்தர் விடுதலை செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் இரு வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் ரவீந்தரின் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை அசோக் நகரில் 19ஆவது அவென்யூவில் கிரீன் பீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ரூ.16 கோடி மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அவர் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது . இந்த சம்பவத்தால் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications