நிலக்கரி இறக்குமதி விவகாரம்! சல்லடை போட்டு சலிக்கும் அமலாக்கத்துறை! லஞ்ச் நேரத்தில் வைத்த பஞ்ச்!
சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குள்ளேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக அல்லவா இருக்கிறது என சீனியர் அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் நொந்து போயிருக்கின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கக்கூடிய காலத்திலேயே அதுவும் அவர் இன்று காலை கூட கோட்டைக்கு வந்திருக்கக் கூடிய சூழலிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவதற்காக தலைமைச் செயலகம் வந்தது சீனியர் அமைச்சர்கள் மத்தியில் ஜீரணிக்க முடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம், அவரது தம்பி அசோக் இல்லம் மற்றும் அவர்கள் இருவருக்கும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை வந்ததற்கு காரணம் நிலக்கரி இறக்குமறி விவகாரம் தொடர்பான ஆவணங்களுக்காக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லஞ்ச் நேரத்தில் சாப்பிடுவதற்காக டிஃபன் பாக்ஸ்களுடன் புறப்பட்ட செந்தில்பாலாஜி அலுவலக ஊழியர்கள், அமலாக்கத்துறையினர் வருகையால் சாப்பிடக் கூட செல்லவில்லை. இதனிடையே சோதனை நடைபெற்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமைச் செயலகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முதல்வரும் தனது அலுவல் பணிகளை முடித்துக்கொண்டு கோட்டையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட பிறகே இந்த ரெய்டு தொடங்கப்பட்டிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications