23 கிமீ.. கண்ணை மூடிக்கிட்டு ஓட்டலாம்.. பொறியியல் அதிசயம்.. சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையில் சபாஷ்
சென்னை: சென்னை - பெங்களூர் விரைவு சாலையில் அமைக்கப்பட உள்ள உயர் மட்ட சாலை மற்றும் விமான நிலைய வளாகம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
வருகிறது பாலம்: இந்த நிலையில்தான் இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின் இதற்கான இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹை வேவின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பானையில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 1.15 லட்சம் பயணிகள் கார் பயணம் செய்கிறது. , இது பீக் ஹவர்ஸில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இங்கே பயணம் செய்கின்றன. இந்த பாலம் கட்டுமானம் முடிந்ததும் சுமார் 80 சதவிகித வாகனங்கள் இந்த பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலைய வளாகம்: இந்த நிலையில்தான் வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) பல கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலைய வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த விமான நிலைய வளாகத்தை சுற்றி இரும்பு கம்பிகள் மூலம் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) அதிகாரிகள், புதிய விமான நிலையத்தில் எஞ்சியிருக்கும் இறுதிப் பணிகளில் ஸ்டீல் வேலியும் ஒன்று. இது முடிந்துவிட்டால் போதும். அதன்பின் பணிகள் இல்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) பாதுகாப்பு தணிக்கைக்குப் பிறகு நவம்பர் மாதத்திற்குள் இந்த விமான நிலையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விமான நிலையத்திற்கு வரும் விதமாக சென்னை பெங்களூர் சாலையை இணைக்கும் இன்னொரு சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, புதிய விமான நிலையம் 850-மீ ஓடுபாதை, டாக்ஸிவே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை கருவி கருவி, விமான போக்குவரத்து கட்டுப்பாடு (ATC) மற்றும் விமான தகவல் பெறும் வசதி, முனைய கட்டிடம் மற்றும் எண்ணெய் கிடங்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எட்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே நிறுத்தக்கூடிய பழைய விமான ஓடுதளம் 20 இருக்கைகள் கொண்ட விமானங்களைக் கையாளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications