முதல்வரின் தனிப்பிரிவுக்கு.. குறைகளை அடுக்கும் பொறியியல் மாணவர்கள்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்களை அனுப்பும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதில், பொறியியல் மாணவர்கள் எக்கச்சக்கமான குறைகளை அடுக்கியிருக்கின்றனர். ஆனால், தற்போது வரை இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு இதுவரை வந்த புகார்களில், பொறியியல் மாணவர்களின் புகார்கள்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

CM special cell vijay TVK

கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 500 புகார்கள், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களிடமிருந்து வந்திருக்கிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் அளித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இப்படி சேர்ந்த மாணவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில், சான்றிதழ்களை திரும்ப வழங்க கால தாமதம் செய்வது, கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும், போதிய பேராசிரியர்கள் இல்லை, தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், தனியார் கல்லூரி தரப்பில் இந்த பிரச்சனை குறித்து வேறுவிதமாக சொல்லப்படுகிறது. அதாவது தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.55,000. இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதை மறுபரிசீலனை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நெருக்கடிதான் கல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் தனிப்பிரிவு

எங்கு புகார் கொடுத்தாலும் தீர்வு காணப்படவில்லை என்பதால்தான், முதல்வரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. http://cmcell.ten.gov.in/register.php என்கிற முகவரியில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், கடந்த ஜூலை முதல் 500க்கும் அதிகமான புகார்கள் குவிந்த பின்னரும், அரசு இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசு இனியாவது உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+