10ம் வகுப்பு முடிவு.. அதிகபட்ச தேர்ச்சி ஆங்கிலத்தில் தான்! மொழிப்பாடத்தில் குறைவு! கணிதத்தில் எத்தனை
சென்னை: இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவ மாணவியருக்கு 10ஆம் வகுப்பு என்பது ரொம்பவே முக்கியமானது. அதுவரை இறுதி தேர்வு என்பது பள்ளி அளவிலேயே நடத்தப்படும். ஆனால் 10ஆம் வகுப்பில் தான் முதல்முறையாகப் பொதுத்தேர்வாக மாநிலம் முழுக்க நடத்தப்படும்.

மேற்படிப்பிற்கு மாணவர்கள் எந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதையும் 10ஆம் வகுப்புத் தேர்வில் ஓரளவுக்குத் தெரிந்துவிடுகிறது. அதன்படி இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
10ஆம் வகுப்பு தேர்ச்சி: கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 9.76 லட்சம் பேர் இந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதற்காக மாநிலத்தில் சுமார் 4000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுகள் முடிந்த பிறகு வழக்கம் போல மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் நடைபெற்றன. அவை அனைத்தும் முடிந்த நிலையில், இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல இதிலும் மாணவர்களை விட மாணவிகளே 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16ஆகவும் இருக்கிறது.
அதேபோல மாவட்ட ரீதியாகப் பார்க்கும் போது 97.67 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிவகங்கை (97.53) மாவட்டம் இரண்டாம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் (96.22%) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதற்கிடையே பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது.
பாடம் வாரியாக: அதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கில பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்துள்ளது. முன்பெல்லாம் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறுவதே கடினம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது நிலைமை அப்படியே மாறி மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து சமூக அறிவியல் பாடத்தில் 95.83% பேரும் அறிவியல் பாடத்தில் 95.75% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அனைவருக்கும் கடினமான பாடமாகக் கருதப்படும் கணித பாடத்தில் இந்தாண்டு 95.75% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மொழிப்பாடத்தில் குறைந்தபட்சமாக 95.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications