"ஆங்கிலம் தான் இந்தியாவின் இணைப்பு மொழி!" அடுத்த வரி கமல் சொன்ன விளக்கம்! கைதட்டி ரசித்த மணிரத்னம்
சென்னை: நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் தான் எனச் சொல்ல.. அங்கிருந்த அனைவரும் அதைக் கேட்டு ரசித்தனர். அதேநேரம் இது அரசியல் பேச்சு இல்லை எனக் கமல் கொடுத்த விளக்கமும் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் இப்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் நாயகன் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இணைவதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலின் பேச்சு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

கமல்ஹாசன்
இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல, உயிரே உறவே தமிழே எனத் தனது ஸ்டைலில் உரையைத் தொடங்கினார் கமல். தொடர்ந்து பேசிய கமல், "இதை மட்டும் நான் தமிழில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதை ஆங்கிலத்தில் சொன்னால் நல்லா இருக்காது என்பதால் தமிழில் சொல்லக் கொள்கிறேன்" என்றார்.
இணைப்பு மொழி ஆங்கிலம்
தொடர்ந்து பேசிய அவர், "இனி இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசப் போகிறேன்" எனச் சொன்னதும் அங்குத் திரண்டிருந்த கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்து கரகோஷம் எழுப்பினர். இதைக் கேட்டதும் மேடையில் இருந்த இயக்குநர் மணிரத்தினமும் சிரித்துக் கொண்டே கைதட்டினார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், திரிஷா ஆகியோரும் கமல் பேச்சைக் கேட்டு ரசித்தனர்.
கொஞ்சம் கேப் விட்டுத் தொடர்ந்து பேசிய கமல், "இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் எதார்த்தம்" என்று குறிப்பிட்ட அவர் தனது பேச்சை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். மேலும் அவர் பேசுகையில், "விருந்தோம்பலில் தமிழன் எப்போதும் சிறந்து விளங்குவான்.. 2000 ஆண்டுகளாக அதை நாம் சிறப்பாகச் செய்து வருகிறோம். இன்று இந்தப் பட நிகழ்ச்சிக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் செய்தியாளர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எது பான் இந்தியா படம்
இன்றைய காலகட்டத்தில் பலரும் பான் இந்தியா படங்களையே எடுக்க முயல்கிறார்கள். அது குறித்தே எங்கும் பேச்சாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எந்தப் படம் நல்ல படமாக இருக்கிறதோ.. அதுவே பான் இந்தியா திரைப்படம். அது எந்த மொழியில் எடுக்கப்படுகிறது என்பது விஷயம் இல்லை.
இத்தனை ஆண்டுகளில் எனக்கும் மணிரத்தினத்திற்குமான உறவு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. நாங்கள் எங்களுக்குள் பேசியதில் 25% மட்டுமே இப்போது வரை செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன்.. இன்னொன்று இந்த தக லைப்.. ஆனால், இன்னும் பல படங்கள் இருக்கிறது. எங்களால் நாங்கள் நினைத்தது போலப் படம் எடுக்க முடிந்ததே இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் சரி அதுவே உண்மை. நாங்கள் பெரிதாகக் கற்பனை செய்வோம். ஆனால், எடுக்கும்போது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு கற்பனையைச் சுருக்க வேண்டி இருக்கிறது" என்றார்.
தக் லைப்
மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், இப்போது போஸ்ட் புரோடக்ஷன் நடந்து வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெலியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications