லஞ்சம் வாங்கி கட்டுக்கட்டாக பணம் சேர்த்த பாண்டியன் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி
லஞ்ச புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாண்டியன் வீட்டிலிருந்து ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கக்கூடிய பாண்டியன் பணியாற்றும் அலுவலகம், சாலிகிராமத்திலுள்ள அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கு போன அதிகாரிகளே அதிர்ச்சியடையும் வகையில் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகைகளை லஞ்சப்பணத்தில் சேர்த்து வைத்திருந்தார் பாண்டியன். பாண்டியன் வீடு அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அடுத்தக்கட்டமாக பாண்டியனை விசாரிக்க சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் வங்கி லாக்கரில் அவர் சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
சென்னை மற்றும் புதுக்கோட்டையில் அவர் வங்கிகளில் லாக்கர் வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அது தொடர்பான அனைத்து விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே அவரிடம் 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதனுடைய மதிப்பு ரூ.7 கோடி ஆகும். அதேபோல வங்கிகளில் வைப்பு தொகையாக ரூ.37 லட்சம் அவர் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
பாண்டியன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இவரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications