இபிஎஃப்ஓ! ரூ. 5 லட்சத்தை அப்படியே அள்ளலாம்! நாடு முழுக்க உள்ள தனியார், அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: EPFO ஆட்டோமெட்டிக் முறையில் தரப்படும் செட்டில்மென்டுகள், அதாவது கூடுதல் பரிசோதனை இல்லாமல், அடிப்படை பரிசோதனைகளை மட்டும் வைத்து வழங்கப்படும் செட்டில்மென்டுகளுக்கான தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதாவது நீங்கள் உங்களின் பிஎப் பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை தர கூடுதல் சோதனைகள் இருக்காது. எப்போதும் செய்யப்படும் பான் கார்டு சோதனை, வங்கி கணக்கு சோதனை ஆட்டோமெட்டிக் முறையில் செய்யப்படும். அதன்படி தானாக 3 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.

EPFO PF Auto Payment method are now allowed till 5 lakhs rupees says Govt

வேகம் காட்டும் பிஎப்

ஏற்கனவே EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ மோட் முறையில் இத்தனை கிளைம்களை நிறைவேற்றி உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.

இப்போது, ​​60 சதவீத அட்வான்ஸ் (திரும்பப் பெறுதல்) EPFO உரிமைகோரல்கள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இதனால் வேகமாக பணம் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதாவது அதிகாரிகள் சோதனை செய்யாமல் தானாக கணினியே ஆவணங்களை சோதனை செய்து 3 நாட்களில் பணத்தை வழங்கிவிடும்.

EPFO அட்வான்ஸ் கேட்டு 1-2 மாதம் காத்திருக்க வேண்டியது இல்லை. முன்பு இதற்கான கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது 1 லட்சம் ரூபாய் வரை எளிதாக பணம் எடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு உள்ளது. நோய்/மருத்துவமனை தொடர்பான உரிமைகோரல்கள் மட்டுமன்றி, வீடு, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றிற்கான அட்வான்ஸ் தொகையும் ஆட்டோ மோடு முறையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

EPFO 3.0 மே அல்லது ஜூன் 2025க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்த பின் ஏடிஎம் வழியாக EPFO நிதி திரும்பப் பெறுதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல எளிமையான சேவைகளைக் இந்த முறை மூலம் கொண்டு வருவோம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO ​​3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி எடுப்பது?

ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO ​​சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும். அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+