வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு.. தேர்தல் நேரத்தில் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளாராக இருந்து வந்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த வெல்லமண்டி நடராஜன் 2016 - 2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற அவர் அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பி ஓபிஎஸ் பக்கம் நின்றார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரிந்த தலைவர்கள் மூலம் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர்.
இதனிடையே, ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அவர் மறுத்ததை அடுத்து அவருடன் இருந்த முக்கிய புள்ளிகள், ஆதரவாளர்கள் என பலரும் விலகி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்பட்டது.
ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுக பக்கம் சென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் அண்மையில் திமுகவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் ட்விஸ்ட்டாக அவர் அதிமுகவில் மீண்டும் ஐக்கியம் ஆனார்.
தொடக்கம் முதலே அதிமுகவில் பணியாற்றி வருபவர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராக இருந்தார். பின்னர் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன் மகனுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வெல்லமண்டி நடராஜன் பலமுறை கட்சித் தலைமையை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. வெல்லமண்டி நடராஜனுக்கு மட்டும் சீட் வழங்கப்பட்டது. எனினும், அவர் 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார்.
2022ல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசமியால் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகச் செயல்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.
அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications