எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்! விஜய்க்கு எதிராக இணையும் திராவிட கட்சிகள்.. பத்திரிகையாளர் பகீர்
சென்னை: ஆட்சியமைக்க விஜய் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக இணைந்து விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த பத்திரிகையாளர்கள் இப்படி சொல்லியிருப்பது தமிழக அரசியல் களத்தில் அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த வெற்றி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை. விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் எனில், இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதுவரை இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் விஜய் உடன் செல்வது குறித்து பாசிட்டிவாக பேசவில்லை. எனவே விஜய் முதலமைச்சர் ஆவது தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர பிளான் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மூத்த பத்திரிகையாளர்களே இதை தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தனியார் செய்தி ஊடகத்தின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம். இந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகலாம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "தவெகவை ஆளுநர் அழைத்து ஆட்சி அமைக்க சொல்லலாம். ஆனால், இதே நிலை நீடித்தால் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் அவரால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே அடுத்த பெரிய கட்சியான திமுகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.
-
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications