பேரறிவாளனுக்கு பரோல் நான் கொடுத்தேன்..7 பேர் விடுதலைக்கு நான் காரணம்.. க்ளைம் செய்யும் இபிஎஸ்!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனடிப்படையில் நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்தது.
இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆகையால் அவர் விடுதலையாகி வீட்டுக்கு சென்றார். எஞ்சிய 4 பேரும், இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நளினி பேட்டி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு நளினி பேட்டி அளித்து வருகிறார். அதில், தமது விடுதலைக்கு காரணம் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிதான். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் போட்டதுதான் தங்களது விடுதலைக்கு காரணம் என கூறி இருந்தார். இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் எடப்பாடி
இதனிடையே சென்னையில் இன்று மழை,வெள்ள பாதிப்புகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். இதன்பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது சென்னை மாநகராட்சி, தமிழக அரசின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். அப்போது நளினி உள்ளிட்ட 6 தமிழர் விடுதலை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கேள்விகளை செய்தியாளர்கள் கேட்ட போது தமது பிரஸ் மீட்டை முடித்துவிட்டு எழுந்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் திடீரென நாற்காலியில் திரும்ப வந்து அமர்ந்து பதிலளித்தார்.

கருணாநிதி செய்தது என்ன?
இது தொடர்பாக எடபபடி பழனிசாமி அளித்த பதில்: திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, கருணாநிதி முதல்வராக இருந்த போது அமைச்சரவை கூட்டப்பட்டது. அந்த அமைச்சரவையில் என்ன தீர்மானம் நிறைவேற்றினார்கள்? நளினிக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கலாம் என்பதுதான்.

நான் எடுத்த முடிவு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் முதலமைச்சரான போது, மீண்டும் அமைச்சரவையை கூட்டினோம். நான் திடமான முடிவெடுத்தேன். நான் எப்போது முடிவெடுத்தாலும் அது திடமான முடிவு.. நியாயமான முடிவு. மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவாக இருக்கும். அப்படி அமைச்சரவையைக் கூட்டி ஏகனமதாக, அனைவரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானம்தான் கால தாமதமாகி இப்போது விடுதலையாகி இருக்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications