பாமக கூட்டணியை உறுதி செய்த கையோடு.. டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. பேசப்பட்டது என்ன?
சென்னை: பாமக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த கையோடு, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 2 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதையடுத்து அமித்ஷா டெல்லி புறப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இதன் மூலமாக அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியது. இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டதாக அறிவித்தனர்.
பாமகவுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாகவும், அதுதொடர்பான பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாமக கூட்டணியை இறுதி செய்த கையோடு, எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணித்துள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

டெல்லியில் இறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பி வருகிறது.
ஆனால் பாமகவுக்கு கொடுக்கும் அளவிற்கே பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருக்கிறார். இதனால் அமித்ஷா - பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், அதிமுக சட்டசபைத் தேர்தல் ரேஸில் கியரை மாற்றி வேகமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது.
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications