ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! அதிமுகவிடம் பேசிக் கொண்டே திமுகவிடம் டீலிங்! குழப்பும் பிரேமலதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் வகையில் தேமுதிக அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் இறுதி நேரத்தில் சீட்டு பேரத்தை அதிகரிக்கும் வகையில் அதிமுக பேச்சுக்கு பிடி கொடுக்காத பிரேமலதா விஜயகாந்த், திமுக தரப்பிலும் இணக்கம் காட்டி வருகிறார். கடந்த தேர்தல்களைப் போலவே கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக்கொள்ளலாம் என கூறி இருப்பது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் இருந்தபோதும் இதே போல் தான் இரண்டாம் கட்ட தலைவர்கள் இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கடைசியில் தேமுதிக அடையாளம் தெரியாமல் போனதாக புலம்புகின்றனர் அந்த கட்சி தொண்டர்கள்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

மேலும் கடந்த காலங்களில் தன்னை மிகவும் விமர்சித்த அன்புமணியையும் கூட்டணியில் சேர்த்து இருக்கிறார். பாஜகவால்தான் அன்புமணி கூட்டணியில் சேர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் 30 எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Premalatha Vijayakanth edappadi palaniswami dmdk

எடப்பாடி கூட்டணி பேச்சு

இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் எடப்பாடி. மேலும் அவர் எடுத்த சர்வே முடிவுகளும், விஜய் பிடிவாதமாக இருப்பதாலும் இன்னும் அந்த கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கவில்லை. இதை அடுத்து தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

தேமுதிக பிரேமலதா

பலமுறை பிரேமலதாவை சந்தித்து பேசியபோதும் இதுவரை அவர் கூட்டணி குறித்து பிடி கொடுத்து பேசவில்லை. மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையால் களம் இறக்கப்பட்டு இருக்கும் பாண்டாவும் பிரேமலதாவை சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அதற்கும் பிரேமலதா விஜயகாந்த் பிடிகொடுத்து பேசவில்லை. ஜனவரி மாதம் நடக்கும் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகு எதுவாக இருந்தாலும் பேசப்படும் என உறுதியாக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

சீட் பகிர்வு

கடந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுக தரப்பில் ஒரு மாநிலங்களவை சீட்டை எதிர்பார்த்தார் பிரேமலதா. இது தொடர்பாக உடன்படிக்கையை கையெழுத்தானதாகவும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தமே செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் திமுக விடவும் தனக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் திமுக ஆட்சியை பாராட்டுவது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பது என போக்கு காட்டி வந்தார்.

அதிமுக - திமுக

மேலும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. கடைசி நேரத்தில் எந்த கட்சி அதிக சீட்டுகளுக்கும், 'சில' பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத்து வருகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது தான் பிரேமலதாவின் எண்ணம் என்கின்றனர் நம்மிடம் பேசிய தேமுதிகவினர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இருந்தபோது அவர் திமுக எதிர்ப்பை பிரதானமாக கொண்டிருந்தார். அவர் இருந்தவரை திமுகவுடன் கூட்டணியும் சேரவில்லை. அதே நேரத்தில் அதிமுகவுடன் மோதல் போக்கையே கையாண்டு வந்தார்.

2026 தமிழக தேர்தல்

இந்த நிலையில் 2011 சட்டமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரம் வரை அதிமுக திமுக என இரு கட்சிகளிடம் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் இருந்த இரு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தெரிந்தே கடைசி நேரத்தில் கூட விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க முடியாது என ஜெயலலிதா பிடிவாதமாக இருந்தார் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது அதே நிலையில் தேமுதிக இருக்கும் நிலையில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்க்காவிட்டால் இந்த முறை கட்சியின் நிலைமை மிக மோசமாகிவிடும் என புலம்புகின்றனர் நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+