“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு
சென்னை: "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்திருந்ததாக வெளியான தகவலை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து தண்டனை பெற்றுத் தருவோம்" என திருவண்ணாமலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தருமபுரியில் பேசுகையில், "கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார்" எனப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, "முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது. கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம், அவருடைய பிள்ளை நான்" என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
மேலும், எடப்பாடியின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகொ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை கண்ணியக்குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து கண்டறிந்து, அப்படி வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்" எனக் கூறியுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications