ஓபிஎஸ் அணி தாவிய 24 மணி நேரத்திற்குள்.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மைத்ரேயன்.. இபிஎஸ் அதிரடி
சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி மைத்ரேயன் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டரில் அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட ஓபிஎஸ்ஸுடனே பயணித்தார் மைத்ரேயன். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமியின் கேம்பிற்கு ஜம்ப்பாகினார்.

108 நாட்கள்
பின்னர் 108 நாட்கள் கழித்து நேற்றைய தினம் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார் மைத்ரேயன். நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் மைத்ரேயனும் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் உள்ளது.

உடல்நிலை பாதிப்பு
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ஓபிஎஸ் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாட்களில் நான் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார். இந்த நிலையில் இவர் ஓபிஎஸ் அணிக்கு தாவி 24 மணி நேரம் கூட ஆகியிருக்காது.

அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கம்
அதிமுகவிலிருந்து மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தரவில் அதிமுக அமைப்பு செயலாளர் உள்பட அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் மைத்ரேயன் நீக்கப்படுகிறார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications