திமுக - தவெக இடையேதான் போட்டியா? விஜய் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: தவெக தலைவர் விஜய், திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என பேசியது குறித்து செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது அவருடைய கருத்து. ஆனால் மக்கள் கருத்து வேறு" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று தெரிவித்தார். அடுத்த நாளே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கினார்.

அதிமுக விவகாரம்
இதையடுத்து சலசலப்புகள் நிலவி வந்த சூழலில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பினார் செங்கோட்டையன். அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவை சந்தித்து விட்டுத் திரும்பினார். இந்தச் சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மினி மாரத்தானை தொடங்கிவைத்தார் தமிழக பாஜக தலைவர் நயினார். இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் நயினார் நாகேந்திரன்.
நயினார் - எடப்பாடி சந்திப்பு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். இதில் அரசியல் பேசவில்லை. பாஜ நிச்சயமாக எந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனையிலும் தலையிடாது." என்றார்.
தம்பி விஜய் இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து, திமுகவுக்கு, எங்களுக்கும் தான் போட்டி என்று எல்லாம் சொல்லக்கூடாது. அதற்கு தேர்தல் வர வேண்டும். ஒழுங்கான வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு எல்லாம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். மக்கள் ஓட்டு போட வேண்டும். அதன் பிறகு தான் சொல்ல முடியும். ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது.
வேட்பாளராக வேனில் செல்லும் மக்களின் சைகைகளை பார்த்தாலே எது ஓட்டாக மாறும் என்று நமக்கு தெரியும். முதல்வராக பணியாற்றி உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா விஷயங்களும் தெரியும். திடீரென வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி? அது எப்படி பொறுத்தமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுடன் யாரையும் ஓப்பிட்டு பேசக்கூடாது." என்றார்.
எடப்பாடி சொன்ன பதில்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என பேசியது குறித்த கேள்விக்கு, "அது அவருடைய கருத்து. ஆனால் மக்கள் கருத்து வேறு" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுகவை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி எனத் தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, மக்களின் கருத்து வேறு எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications