எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை!
சென்னை: எடப்பாடி பழனிசாமி சாதித்தே விட்டாரே.. இதுதான் அதிமுகவினர் மத்தியில் தற்போது எழுந்திருக்கும் குரல். காரணம், பல வாரங்களாக இழுபறியில் இருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை, நேற்று ஒரு வழியாக சுபமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதுவும் எப்படி? எடப்பாடி பழனிசாமி டெல்லி சாணக்கிய தலைகளிடம் தன் அரசியல் முதிர்ச்சியைக் காட்டி, சீட் கணக்கில் மேஜிக் செய்துள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆடியிருக்கும் 'சீட் மேஜிக்' இப்போது அரசியல் விமர்சகர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

அமித் ஷாவுடன் மல்லுக்கட்டிய எடப்பாடி!
பாஜக மேலிடம் ஆரம்பத்தில் 40 தொகுதிகள் வரை டிமாண்ட் செய்ததாகத் தகவல். ஆனால், எடப்பாடி தரப்போ, "யதார்த்தம் வேற..." என்று கறாராகப் பேசி, 27 இடங்களுடன் தாமரையைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; மாறாக திமுகவின் 'பாஜகவின் நடிகை அதிமுக' என்ற பிம்பத்தை உடைக்கும் எடப்பாடியின் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
"40 சீட் வேணும்" எனத் தாமரைத் தரப்பு ஒற்றைக்காலில் நின்றபோது, எடப்பாடி தரப்பிலிருந்து போன பதில் மிகத் தெளிவானது. "25-க்கு மேல ஒரு சீட் கூட கிடையாது." டெல்லிக்கு ஒரு முறை அல்ல, பலமுறை பறந்தும் எடப்பாடி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். பா.ஜ.க தரப்பில் அமித் ஷாவே களமிறங்கியும், "கள நிலவரம் இதுதான்" என புள்ளிவிவரங்களோடு பதில் சொல்லி அதிரவைத்தார் இபிஎஸ். டெல்லிக்கு எடப்பாடியை வரவழைத்து காத்திருக்க வைத்திருந்தும் கூட எடப்பாடி இறங்கி வரவில்லை.
டெல்லி டூ சென்னை: நடந்ததென்ன?
டெல்லிக்கு அடிக்கடி விசிட் அடித்த இபிஎஸ், மேலிடத்திடம் ஒரு விஷயத்தில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார். "கூட்டணியை வழிநடத்துவது நாங்கள்தான்" என்பதில் பின்வாங்கவே இல்லை. கடந்த 2019 தேர்தலில் பாஜகவுக்கு 5 இடங்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கொடுத்து பாஜகவை ஒரு வட்டத்திற்குள் வைத்திருந்த இபிஎஸ், இப்போதும் அதே பாணியைக் கடைப்பிடித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ்: எங்கே சறுக்கல்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. தமிழகத்தில் வெறும் 4% வாக்கு வங்கி வைத்துள்ள காங்கிரஸுக்கு 28 இடங்களா? அதே சமயம் தமிழகத்தில் 7% முதல் 8% வரை வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படும் பாஜகவை 27 இடங்களுக்குள் எடப்பாடி சுருக்கிவிட்டதுதான் இப்போது அதிமுக தொண்டர்களின் 'கெத்து' பேச்சாக இருக்கிறது.
"தேசிய அளவில் எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சிக்கு 28 இடங்களை வாரி வழங்கிய திமுக எங்கே? தேசிய ஆளும் கட்சியான பாஜக கட்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி எங்கே?" - இதுதான் ரத்தத்தின் ரத்தங்களின் தற்போதைய சமூக வலைதள ஸ்டேட்டஸ்.
டிடிவி - அன்புமணி: ஒருவழியாகப் படிந்த கணக்குகள்!
டிடிவி தினகரனின் அமமுக மற்றும் அன்புமணியின் பாமக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது இபிஎஸ்-க்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
பாமக: 18 தொகுதிகள்
அமமுக: 11 தொகுதிகள்
தன்னை ஓரம் கட்ட நினைத்த டிடிவி தினகரனையும், கூட்டணிக்கு இழுபறி செய்த அன்புமணியையும் சரியான எண்ணிக்கையில் சமாதானம் செய்து, தாமரைக்கும் 'நோ' சொல்லாமல் சீட் ஒதுக்கியிருப்பது எடப்பாடியின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
ஜெயலலிதா இருந்தபோது 'சசிகலா' நிழலில் இருந்த டி.டி.வி தினகரன், இன்று எடப்பாடியின் தலைமைக்குக் கீழே 11 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கைகோர்த்திருக்கிறார். கடந்த முறை 23 இடங்களை வாங்கிய பாமக-வுக்கு, இந்த முறை 18 இடங்கள் மட்டுமே. "ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சுல்ல..." என்கிற எடப்பாடியின் லாஜிக்கில் அன்புமணியும் சமாதானமாக வேண்டியிருந்தது.
மாஸ்டர் ஸ்ட்ரோக்!
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே எனப் பெரிய பட்டாளமே இருந்தாலும், தலைமைப் பொறுப்பைத் தன் வசமே வைத்திருக்கிறார் எடப்பாடி. "எடப்பாடிக்கு கூட்டணி வியூகம் தெரியாது" என்று சொன்னவர்களுக்கு, அமித் ஷாவுடன் நேரடியாகப் பேசி இந்த சீட் பங்கீட்டை முடித்த விதம் ஒரு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவின் 'Narrative' எனப்படும் பரப்புரையை முறியடிக்க, எடப்பாடி கையில் எடுத்திருக்கும் இந்த 'சீட் பங்கீட்டு ஃபார்முலா' கிட்டத்தட்ட இப்போது அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. கடந்த 2021-ல் பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிட்டு 4-ல் மட்டுமே வென்றது. பாமக 23-ல் நின்று 5-ல் மட்டுமே வென்றது. இந்த 'ஸ்ட்ரைக் ரேட்'டை கையில் வைத்திருந்த எடப்பாடி, "ஜெயிக்கிற குதிரைக்குத்தான் அதிக இடம்" என கறாராகப் பேசி காரியம் சாதித்திருக்கிறார்.
"எடப்பாடிக்கு கூட்டணி அரசியல் சரியா வரலை" என்று சொன்னவர்களுக்கு.. பியூஷ் கோயல் மற்றும் பலர் என டெல்லி டீமையே எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வரவழைத்து, தன் கை ஓங்கியிருப்பதை நிரூபித்திருக்கிறார் சேலத்துக்காரர். இப்போது பந்து ரத்தத்தின் ரத்தங்கள் பக்கம். 170 தொகுதிகளில் அ.தி.மு.க-வை ஜெயிக்க வைப்பாரா எடப்பாடி? பொறுத்திருந்து பார்ப்போம்!
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!












Click it and Unblock the Notifications