“அவ்ர் அதிமுகவில் இல்லை” செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கேட்டதுமே எடப்பாடி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பற்றிய கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரிடமே கேளுங்கள்" என பதில் அளித்துள்ளார்.
அதிமுக கட்சி தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் செயல்பட்டு வந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக் கெடு விதித்தார் செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. தொடர்ந்து, தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசியிருந்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டுத் தூக்கினார். இதனையடுத்து பாஜக அல்லது திமுகவில் செங்கோட்டையன் இணைவார் என தகவல் வெளியானது. நேற்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், விஜய்யை நேற்று மாலை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், செங்கோட்டையன் அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரிடமே போய் கேளுங்கள்" என பதில் அளித்துள்ளார்.
மீண்டும் அவர் காரில் ஏற வந்தபோதும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அவர் அதிமுகவில் இல்லை. அதனால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." எனப் பதில் கூறிவிட்டு உடனே கிளம்பினார்.
-
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications