"திருடர் கையில் சாவி கொடுத்தது போல்”.. திமுக பஞ்சாயத்து தலைவியால் அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: "திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல் திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது." என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடுபோனது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்" திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்?
இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- "இல்லை"!
நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- Bye Bye Stalin!" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் திமுகவில் உறுப்பினர் ஆகும்போது, கொள்ளையடிப்பதற்கான உரிமம் உங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது. கீழே உள்ள படத்தில் வட்டமிடப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக பஞ்சாயத்துத் தலைவர் ஆவார், அவர் ஒரு பஸ்சில் பயணித்த ஒருவரிடமிருந்து 4 சவரன் தங்கத்தை திருடியபோது பிடிபட்டார்.
When you become a member of DMK, you are rewarded with the license to loot.
— K.Annamalai (@annamalai_k) September 6, 2025
The person circled in the picture below is a DMK panchayat president in Tirupatthur district who was caught stealing 4 sovereign gold from a passenger in a bus.
From pickpocketing on buses to… pic.twitter.com/4OYIFw7RJU
பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது" என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications