அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அடுத்தகட்ட தலைமையை உருவாக்குவது தொடர்பாக கட்சிக்குள் புதிய விவாதம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சில நிர்வாகிகள் மத்தியில் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் வாரிசு அரசியல் குறித்த விவாதம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் மிதுனை கட்சிக்குள் கொண்டுவருவது இன்றோ அல்லது நேற்றோ போடப்பட்டது அல்ல.. ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீசியதே மிதுனுக்காகத்தான் என்கின்றனர் முன்னாள் அதிமுகவினர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

AIADMK Edappadi Palaniswami Mithun

அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மிதுனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக

கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக இளம் தலைமுறையை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த சில நிர்வாகிகள், மிதுனை இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "இது போன்ற விஷயங்களை தற்போது பேச வேண்டாம். எனக்கு அதில் விருப்பமில்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த விவாதம் அங்கேயே முடிவடையவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கே.பி. முனுசாமி

கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, கட்சியின் மறுகட்டமைப்புக்காக புதிய தலைமுறையை கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் நலனை கருத்தில் கொண்டு மிதுன் அரசியலில் வர விரும்பினால் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாதங்கள் நடைபெற்றபோது எடப்பாடி பழனிசாமி பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கூறினர்.

மிதுன்

இதனால், மிதுனை படிப்படியாக கட்சி அரசியலுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் அதிமுக வட்டாரங்களில் பரவி வருகின்றன. முதற்கட்டமாக இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டு, பின்னர் முக்கிய தலைமைப் பொறுப்புகளுக்கு அவரை முன்னிறுத்தும் திட்டம் இருக்கலாம் என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்து வரும் சில முன்னாள் அதிமுக நிர்வாகிகள் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை சுட்டிக்காட்டும் அவர்கள், ஒற்றைத் தலைமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அப்போது தொடங்கியதாக கூறுகின்றனர்.
தற்போது மிதுனை முன்னிறுத்தும் முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதன் பின்னணியிலும் மிதுனை கொண்டு வரும் திட்டம் இருந்திருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மிதுனுக்கு முக்கிய பொறுப்பு

மறுபுறம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இந்த விமர்சனங்களை நிராகரிக்கின்றனர். கட்சியில் யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதை நிர்வாகிகளும் தொண்டர்களும் தீர்மானிப்பார்கள் என்றும், மிதுன் தொடர்பான விவாதம் தற்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனினும், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தலைமுறை மாற்றம், இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு, கட்சி மறுசீரமைப்பு போன்ற விவாதங்கள் வேகமெடுத்து வரும் நிலையில், மிதுனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+