அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டு.. அன்னதானம் வழங்கும் ஈபிஎஸ் அணி
சென்னை: அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டாகும் நிலையில் நினைவு நாள் கொண்டாடப்படும் என எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் விசுவாசமிக்க தொண்டரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதியும், கழகத் தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்துக் கொண்டாடிய மூத்த முன்னோடியும், கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவராகப் பணியாற்றியவர் மதுசூதனன்.

அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 5.8.2022-வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகத்தின் சார்பில், தண்டையார்பேட்டை, செல்வ வாணிமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் கழக மகளிர் அணிச் செயலாளர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் அதிமுக செயலாளர் நா.பாலகங்கா அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் தலைமையில் மதுசூதனன் அவர்களுடைய திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நாள் முழுவதும் மேற்படி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.S. ராஜேஷ் அவர்கள் மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications