பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. முக்கியமான நேரத்தில் நடக்கும் மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், கார் மூலம் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறார்.

Narendra modi

அங்கு தமிழக முதல்வர் விஜய்யுடன் சேர்ந்து போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். அதன் பின்னர் நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி.

அங்கிருந்து கார் மூலம் கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பகல் 12.30 மணியளவில் வருகிறார். பின்னர் அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், மாலை 3.45 அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 3 நாட்களுக்கு எஸ்.பி.ஜி. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 3 நாட்களுக்கும் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். அதன்பிறகு, 6 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

இதன் காரணமாக அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்தையே பிடித்தது. இப்படியான சூழலில், பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்குப் பிறகு தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதம் வலுப்பெறக்கூடும். குறிப்பாக, பாஜக - அதிமுக உறவு, எதிர்காலத் தேர்தல் வியூகங்கள் தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் பெறக்கூடும். எனவே இந்த மீட்டிங் உற்றுநோக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+