Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை மலைபோல நம்பிய ஓபிஎஸ்.. திக்கு தெரியாத திசையில் தர்ம யுத்த நாயகனின் அரசியல் எதிர்காலம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் பாஜக மீது ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக விவகாரங்களில் பாஜகவையும் டெல்லியையும் ஓ.பன்னீர்செல்வம் மலைபோல நம்பி இருந்தார். இப்போது உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவாலும் பாஜகவின் அறிவிப்பாலும் எதிர்காலம் குறித்த பெரும் கேள்வியுடன் தவித்து கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ்.

அதிமுகவில் தமக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது; தம்மையே தொண்டர்கள் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என மிதமிஞ்சிய நம்பிக்கையில் வலம் வந்தார் ஓபிஎஸ். ஆனால் இபிஎஸ்ஸோ பக்கா ஸ்கெட்ச் போட்டு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அத்தனை பேரையும் தம் வயப்படுத்தினார்.

Erode By Election: O.Panneerselvam very upset over BJP

இந்த கள யதார்த்தத்தை புரிந்தும் புரியாமலும் பாஜகவை மலைபோல நம்பினார் ஓபிஎஸ். இதற்காகவே நீதிமன்ற படிகளேறினார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் திருப்பமாக அமைந்துவிட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே பாஜகவுக்காக மட்டுமே ஓபிஎஸ் பேசினார். பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு போனது முதல் பாஜகவுக்காக தேர்தல் பணிக்குழுவை அமைத்தது வரை ஓபிஎஸ்-ன் அத்தனை செயல்பாடுகளுமே பாஜகவை நம்பித்தான் அமைந்தது.

இந்நிலையில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என தம்மை அங்கீகரிக்க வேண்டும்; இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பது இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு. இம்மனு மீதான தேர்த்ல் ஆணையத்தின் பதிலும் ஓபிஎஸ்க்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது; இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவெடுப்பர் என்றது தேர்தல் ஆணையம்.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் ஓபிஎஸ் , இபிஎஸ் அணிகள் அறிவித்தன. இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது இபிஎஸ் அணி. ஆனால் ஓபிஎஸ் தரப்போ, பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் வாபஸ் பெறுவோம் என தரைலோக்கல் லெவலில் பாஜகவை ஆதரித்தது.

இந்நிலையில் இபிஎஸ்-ன் இடையீட்டு மனு மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இப்போது பேரிடியாக ஓபிஎஸ் அணிக்கு அமைந்துவிட்டது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரிக்க கூடிய ஒருவரை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இபிஎஸ் அணி வேட்பாளர் தென்னரசுவையே வேட்பாளராக ஏற்றுக் கொண்டனர். வேறுவழியே இல்லமால் ஓபிஎஸ் தரப்பும் இப்போது இபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டது. அடுத்தகட்டமாக அதிமுக வேட்பாளர் குறித்து ஓபிஎஸ் அணிக்கும் படிவத்தை அனுப்பி கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது இபிஎஸ் அணி. பாஜகவும் இபிஎஸ் அணிக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், அதிமுக நலனுக்காக இணைந்து செயல்படுவதே நல்லது என ஓபிஎஸ் தரப்பிடம் தெரிவித்தோம்.. தென்னரசுவும் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டவர். அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றோம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். சுயேட்சை வேட்பாளரை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது எனவும் கூறினார்.

இப்படி பாஜகவும் கைவிட உச்சநீதிமன்றமும் கைவிட எங்கே செல்லும் இந்த பாதை என திக்கு திசையும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ். இதனாலேயே கடந்த சில நாட்களாக செய்தியாளர்களை கூட சந்திக்க மறுக்கிறாராம் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+