ஈரோடு, திண்டுக்கல், சென்னையில் "தலை சுத்தவிட்ட" சின்ன வெங்காயம்.. அடுத்து பூண்டு.. விவசாயிகள் ஹேப்பி
சென்னை: வழக்கமாக வெங்காயம்தான் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தரும்.. இப்போது, இந்த லிஸ்ட்டில் பூண்டும் சேர்ந்துள்ளது, இல்லத்தரசிகள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது.

சின்ன வெங்காயம்: இதன்காரணமாக, ஒரு கிலோ வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். இந்த நிலைக்கு வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு, தற்சமயம் தடை விதித்திருக்கிறது மத்திய அரச.. இதனால் வெங்காய விலையில் மாற்றம் தென்பட துவங்கியது.
போதாக்குறைக்கு காலநிலையின் சூழலும், வெங்காய வளர்ச்சிக்கு வசதியாக அமைந்தது.. இதனால், வெங்காயவரத்து அதிகரித்தது.. ஒரு கிலோ வெங்காயம் 45 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், 4 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தைகளில் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை, ரூ.10ஆக திடீரென குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானார்கள். ஆனால், பொதுமக்கள் குஷியானார்கள்.
குஷியில் வியாபாரிகள்: இப்போது, பூண்டு விலையை கேள்விப்பட்டு, பொதுமக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.. வியாபாரிகள் குஷியில் உள்ளனர்.. காரணம், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.. நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில்ல்தான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பூண்டு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இதைதவிர, வெளிமாநிலங்களிலிருந்தும் நமக்கு பூண்டு இறக்குமதியாகிறது.
தற்போது, பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும், வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்குப் பூண்டு வரத்து குறைந்துவிட்டதாம்.. இதனால், பூண்டின் விலை கிலோவுக்கு ரூ.400 வரை அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கெல்லாம் காரணம், உத்தரப்பிரதேசத்தில் இருந்து நமக்கு இறக்குமதி செய்யப்படும் பூண்டு, விளைச்சல் தற்போது குறைந்துள்ளதாம்.. இதைத்தொடர்ந்து வரத்தும் குறைந்துவிட்டதாம்..
விலை உயர்வு: கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை வரத்து குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அதனால்தான், பூண்டின் விலையும் உயர்ந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் வியாபாரிகள் சொல்கிறார்கள். பூண்டு விலை ரூ.400, மலைப்பூண்டின் விலை ரூ.450 என்பதை கேள்விப்பட்டு, இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications