விமானத்தில் பறந்த 34 மலைவாழ் மாணவர்கள்! பிறந்தநாளில் ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ்! நெகிழ்ந்த ஈரோடு
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 34 மாணவ-மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்ற திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று தனது 72வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைரவான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்என்

ரவி உள்பட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். மாநிலம் முழுவதும் தனது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிய வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதன் பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்கள் மற்றும் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலினுக்கு விமானத்தில் பறந்து சென்று அரசு பள்ளியில் படிக்கும் மலைக்கிராம மாணவ-மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தொட்டகோம்பை, கரும்பாறை கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு விமான பயணம் என்பது பெரும் கனவாக இருந்தது. இப்படியான நிலையில் தான் திமுகவை சேர்ந்த நல்லசிவம், சிவபாலன் ஆகியோர் சேர்ந்து மலைகிராம மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்ல விரும்பினர்.

அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் 34 மாணவ-மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்களை திமுக நிர்வாகிகள் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர். அதன்பிறகு சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மாணவ-மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்து கூறினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications