இது நடந்தாலே.. எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பிளஸ்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. கவனிக்கும் திமுக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடும் சவால் அளித்தாலே அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்கிறார்கள்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடும் சவால் அளித்தாலே அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்கிறார்கள். எதிர்க்கட்சி நாங்கள் தான் என்று சொன்னவர்களை எல்லாம், அதிமுக தான் எதிர்க்கட்சி, தான் தான் எதிர்க்கட்சி தலைவர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி கிடைக்கும் என்கிறார்கள்.
வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி கூட்டணியே வெல்லும் என்ற நிலையே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல்களில் உதயசூரியன் மற்றும் இரட்டை இல்லை என்றே போட்டி இருக்கும். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னம் மற்றும் இரட்டை இலை என்று உள்ளது. எனவே கண்டிப்பாக போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
ஆளும் கட்சி கூட்டணியை எளிதாக வெல்ல விடாமல் செய்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பிளஸ் என்கிறார்கள். ஏனெனில் எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக என்ற இயக்கம் எளிதாக கிடைக்கவில்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓரம் கட்டி, கூடவே இருந்த ஓ பன்னீர்செல்வத்தையும் ஓரம் கட்டி கடைசியில் பாஜகவையும் சமாளித்து தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சக்தி வாய்ந்த தலைவராக உருவமாறி இருப்பதாக சொல்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர்
இதுவரை எதிர்க்கட்சி நாங்கள் தான் சொல்லி வந்த பாஜக இந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை. அமமுகவும் போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டது. ஓ பன்னீர்செல்வமும் ஒதுங்கிவிட்டார். காங்கிரஸ் தவிர்த்து பார்த்தால் தேமுதிகவும், நாம் தமிழர் கட்சி மட்டுமே கட்சிகள் என்ற முறையில் களத்தில் உள்ளன. உச்ச நீதிமன்றம் வரை போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தல், அவர் தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவர் என்பதை நிரூபிக்கும் களமாக இருக்குமாம்.

காங்கிரஸ் நிலை
கடந்த முறை அதிமுக போட்டியிடவில்லை. அதற்கு முன்பு 2016 இல் போட்டியிட்ட போது அதிமுக வெற்றி பெற்ற தொகுதியாகும். ஏன் மொத்த ஈரோடு மாவட்டத்திலும் அதிமுக தான் 2016ல் வெற்றி பெற்றிருந்தது. 2021 தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தான் கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை நேரடியாக அதிமுகவே போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை தர வாய்ப்பு உள்ளதாம். டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு தோற்காமல், மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாத்தில் தோற்றால் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பிளஸ் ஆகத்தான் முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திமுக அரசு பலம்
ஒரு வேளை இந்த தேர்தலில் காங்கிரஸை காலி செய்து அதிமுக வெற்றி பெற்றால் அது, திமுகவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். தமிழக மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறி நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பிரச்சாரத்தை எடப்பாடியால் தொடங்க முடியும். அத்துடன் பாஜகவிடமும் தான் தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவர் என்பதை எடப்பாடி நிரூபித்துவிடுவார். ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. காங்கிரஸ் கட்சியை விட திமுக இந்த வெற்றிக்கு அதிகமாக வேலை செய்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திமுக கரைவேட்டிகளே அதிகமாக காணப்படுகிறது. ஆளும் கட்சியான திமுக மிக அசுர பலத்தோடு ஜெயிக்கவே விரும்பும். மொத்ததில் இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது.

வலுவான தலைவர்
ஏற்கனவே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்போது ஈரோடு கிழக்கில் ஜெயித்தாலோ அல்லது ஜஸ்ட் மிஸ்ஸில் தோற்றால் கூட அது கட்சியினரையே பெரிய நம்பிக்கையை விதைத்து போல் ஆகிவிடும். ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீறி பெரிய தலைமையாக உருவாகிய எடப்பாடி பழனிசாமியை பாஜக முழுமையாக நம்பும் வலுவாக தலைவராக எடப்பாடி பழனிசாமி உருமாற இந்த தேர்தல் முக்கியமானதாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications