ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விஜய் எடுத்த முடிவால்.. பெரிய பிரேக் போட்ட தமிழக வெற்றிக் கழகம்
ஈரோடு: ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில்,
காங்கிரஸ் சார்பாக திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்றார்
தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் கோமதி எஸ் 11,629 வாக்குகளை பெற்றார்

இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக கடந்த வருடம் அங்கே இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணி காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
நீண்ட காலத்திற்கு பின் அவர் சட்டசபைக்கு இதன் மூலம் திரும்பினார்.
காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் 110,156 வாக்குகளை பெற்றார்
அதிமுக சார்பாக கே எஸ் தென்னரசு 43,923 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளை பெற்றார்
மீண்டும் சட்டசபை தேர்தல்: ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
அங்கே எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலை காலமானார். உடல் உபாதைகள், வயோதிகம் காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிக மோசமானது. அவரின் உடல்நிலை கடந்த 2 நாட்களாக தீவிரமாக மோசம் அடைய.. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எதையும் உள்ளத்திலிருந்து உரைக்கும் ஆற்றல் பெற்ற அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்தாரே! நெடிய அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலில் பேரிழப்பாகும். கனத்த இதயத்துடன் அருமை நண்பருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினேன், என்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மீண்டும் இடைத்தேர்தல்: இதனால் ஒரே சட்டசபை காலத்தில்.. ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மீண்டும் இங்கே காங்கிரஸ் போட்டியிடும். காங்கிரஸ் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் திமுக போட்டியிடும். ஆனால் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வாய்ப்பு இல்லை.
இதில் கவனிக்க வேண்டியது.. இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் உள்ளே வந்துள்ளது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்தது. இதில் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொண்டது.
இந்த திருத்தப்பணிகளை த.வெ.க. தலைவர் விஜய்யும் உன்னிப்பாக கவனித்துள்ளார். இதுகுறித்து, மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கிராமம் தொடங்கி நகரம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட விஜய், இது குறித்து ஒரு கடிதத்தை நம் கட்சியினருக்கு நீங்கள் அனுப்பி வைத்துவிடுங்கள் என்று புஸ்ஸி ஆனந்திடம் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆலோசனை நடந்த போது, ''நம் தொண்டர்கள் அனைவரும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரிபார்க்கச் சொல்லுங்கள் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
ஆனால் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு குறைவு என்கிறார்கள். முதல் தேர்தல் நேரடியாக சட்டசபை தேர்தலாக இருக்க வேண்டும் அல்லது ஊரக உள்ளாட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்று விஜய் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications