இரட்டை இலை முடங்கினால் கை வண்டி சின்னம்- தேர்தல் ஆணைய லிஸ்ட்டில் புல்லட் இல்லாததால் இபிஎஸ் ப்ளான்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டால் புல்லட் சின்னத்தை தேர்வு செய்யலாம் என அதிமுகவின் இபிஎஸ் அணி முடிவு செய்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் புல்லட் சின்னம் இல்லை என்பதால் கை வண்டி சின்னத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாம் இபிஎஸ் அணி.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 27-ல் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக அணிகளோ இன்னமும் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கின்றன. அதிமுகவின் இபிஎஸ் அணியானது, இரட்டை இலை சின்னத்தை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்சநீதிமன்றமானது தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் அணி ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் இந்த பதிலை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் இபிஎஸ் அணி, ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணியோ, பாஜகவின் முடிவுக்காக காத்திருக்கிறது. பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அந்த கட்சிக்கு தேர்தல் பணி செய்ய 118 பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது. ஒருவேளை பாஜக முடிவு எடுக்காமல், வேட்பாளரை நிறுத்தாமல் போனால் மட்டுமே வேட்பாளரை நிறுத்தலாம் என நினைக்கிறது ஓபிஎஸ் அணி.

இந்நிலையில் அதிமுகவின் உட்கட்சி பூசலால் இரட்டை இலை சின்னம் முடங்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இதனாலேயே எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார். அதிமுகவில் பிரச்சனை நீடிப்பதால் இரட்டை இலை சின்னமும் முடங்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் புல்லட் சின்னத்தை ஒதுக்க கோருவது என இபிஎஸ் அணி திட்டமிட்டிருந்தது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் புல்லட் சின்னம் என்பது இல்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து கை வண்டி சின்னத்தை தேர்வு செய்யலாம் என் திட்டமிட்டுள்ளதாம் இபிஎஸ் அணி. எம்ஜிஆர் சில படங்களில் கை வண்டி இழுப்பது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார். ஆகையால் கை வண்டி சின்னத்தை கேட்கலாம் என யோசனை கூறியுள்ளனர் சில சீனியர்கள். இதனையடுத்து கை வண்டி சின்னத்தை கேட்க முடிவு செய்ததாம் இபிஎஸ் அணி.












Click it and Unblock the Notifications