ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு நாளை தொடக்கம்!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலமாக வாக்களிப்பது நாளை முதல் தொடங்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 256 முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தி உள்ளனர். இவர்களில் 13 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்; 33 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். கர்நாடகா மாநில பெண் பத்மாவதி சுயேட்சையாக தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது சர்ச்சையானது. இதனையடுத்து தேர்தல் அதிகாரி மணீஷ் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் தபால் வாக்களிக்க உள்ளனர். வரும் 27-ந் தேதி வரை தபால் வாக்களிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு படிவங்கள் வழங்கப்படும்; அந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்து/ கைரேகை பெறப்படும். பின்னர் ரகசியமாக வாக்குச் சீட்டில் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவர். உடல்நிலை பாதிக்கப்பட்டு வாக்களிக்க இயலாதவர் எனில் அவரது சார்பில் கட்சி சார்பற்ற ஒரு பிரதிநிதி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய குழு வீடுகளுக்கு வரும் போது மாற்றுத் திறனாளிகள் தரப்பில் உரிய அரசு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications