ஈரோடு தவெக பொதுக்கூட்டம்.. விஜய் பிரசாரத்தில் செங்கோட்டையன் வைத்து இருக்கும் சர்ப்ரைஸ்?
சென்னை: அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று நிர்வாகிகள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாக கூறப்படும் நிலையில் இன்று நடக்கும் ஈரோடு தவெக பொதுக்கூட்டத்தில் சில முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் கட்சியில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்றைய கூட்டத்தில் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால், தவெக கூட்டம் அவரது கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் இன்று நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

ஈரோடு விஜய் பொதுக்கூட்டம்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் கூட்டம் என்பதால் போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். போலீசார் விதித்த நிபந்தனைகளை ஏற்று இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாக்ஸ் பாக்ஸாக பிரிக்கப்பட்டு இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்
ஒவ்வொரு தடுப்பு வேலி பகுதியிலும் சுமார் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை காட்டும் வகையில் செங்கோட்டையன் பிரமாண்டமாக கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
ஈரோடு கூட்டத்தில் விஜய் குறைந்தது 30 நிமிடமாவது பேச வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு வெளியிடும் விஜய்?
செங்கோட்டையன் இது பற்றிய அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்துவிட்டு சென்றார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று நிர்வாகிகள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது.
எனவே அதற்கான முயற்சிகளில் செங்கோட்டையன் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சில முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் கட்சியில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்றைய கூட்டத்தில் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால், தவெக கூட்டம் அவரது கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகள் வர வேண்டாம்
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவெகவினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ளார். புஸ்சி ஆனந்த் நேற்று இது தொடர்பாக வெளியிட்ட அறிவுறுத்தலில், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை.
பின் தொடர வேண்டாம்
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும் போதும், விஜய் வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது என்பத உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.
-
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications