தென்காசிக்கு ஹேப்பி நியூஸ்.. என்னது தினமும் செங்கோட்டை வரையிலா.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு
சென்னை: ஈரோடு -திருநெல்வேலி தினசரி பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 24ம் தேதி முதல்(நாளை) ஈரோடு -திருநெல்வேலி ரயில் செங்கோட்டை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "16845/16846 ஈரோடு -திருநெல்வேலி தினசரி முன்பதிவு இல்லாத பயணிகள் ரயிலை தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீடிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தள்ளது. ஈரோடு முதல் திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (நாளை) ஜனவரி 24ம் தேதி முதலே செங்கோட்டை வரை இயக்கப்படும்.

ஜனவரி 24ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் ஜனவரி 25ம் தேதி செங்கோட்டைக்கு செல்லும். இந்த ரயில் வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு பிறகு சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடயம், பவூர்சத்திரம், மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் நின்று இறுதியாக செங்கோட்டை போகும்.
இந்த ஈரோடு -செங்கோட்டை ரயிலை மத்திய தகவல் ஒளிபரபப்பு துறை இணையமைச்சர் எல் முருகன், ஈரோடு ரயில் நிலையத்தில் நாளை பிற்பகல் 2 மணி அளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் பிற்பகல் இரண்டு மணிக்கு புறப்பட்டு இரவு 8.50க்கு திருநெல்வேலி சென்றடையும்.

அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் அதாவது இரவு 8.55க்கு திருநெல்வேலியில் புறப்படும் ரயில், சேரன்மாதேவிக்கு இரவு 9.12க்கும், 9.22க்கு கள்ளிடைக்குறிச்சியும், இரவு 9.27க்கு அம்பாசமுத்திரமும், இரவு 9.42க்கு கீழக்கடாயமும், 9.56க்கு பவூர் சத்திரமும், இரவு 10.10க்கு தென்காசியும், இரவு 11.10க்கு செங்கோட்டையும் சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5 மணிக்குபுறப்படும் ஈரோடு ரயில் தென்காசிக்கு காலை 5.13க்கு வரும். அதன்பிறக பாவூர்சத்திரம், கீழக்கடாயம், அம்பாசமுத்திரம், கள்ளிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் நின்றுவிட்ட காலை 6.25க்கு திருநெல்வேலி வரும். திருநெல்வேலியில் இருந்து காலை 6.30க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு சென்றடையும்" இவ்வாறு தெற்கு ரயில்வே தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications