ஈரோடு டூ விழுப்புரம்..சேலம் டூ மூகாம்பிகை.. குறுக்கே வரும் மதுரை.. இந்தியன் ரயில்வே அதிரடி.. சூப்பர்
சென்னை: இந்தியன் ரயில்வே முக்கிய அதிரடி ஒன்றினை பயணிகளுக்காக கையில் எடுத்துள்ளது.. அத்துடன் ஆன்மீக சுற்றுலா குறித்தும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்க, இந்திய ரயில்வே, பாரத் கவுரவ் என்ற திட்டத்தின் மூலம் ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம், ஒவ்வொரு வருடமும் இந்த ஆன்மீக சுற்றுலா பயணத்தை இந்தியன் ரயில்வே நடத்தி வருகிறது.. கடந்தவருடம்கூட, தென்னகத்தில் ஆன்மீக சுற்றுலா பயண ரயில் இயக்கப்பட்டு, அதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு 6.3 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சுற்றுலா ரயில்: சமீபத்தில்கூட, கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக புரி, கோனார்க், காசி, அயோத்தி, கொல்கத்தா என பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில் சேவை குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்போது, மீண்டும் ஆன்மீக சுற்றுலா ரயிலை இயக்க இந்தியன் ரயில்வே கேட்டரிங், டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்திருக்கிறது.
வருகிற டிசம்பர் 7 முதல் திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்து மதுரை வழியாக உடுப்பி, மூகாம்பிகை, சிருங்கேரி கோவா வரை இந்த ஆன்மீக சுற்றுலா ரயிலை இயக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ரயில்வே அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ராஜபாளையம்: டிசம்பர் 7 அதிகாலை 12:30 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்து புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை (புறப்படும் நேரம் காலை 7:30 மணி), திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், சென்னை, காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனுார், பாலக்காடு வழியாக சென்று டிசம்பர் 8 இரவு 7:30 மணிக்கு கோவா மட்கான் சேரும்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக டிசம்பர் 9, 10 ல் உடுப்பி, மூகாம்பிகை கோயில், முருதேஷ்வர் கோயில், சிருங்கேரி ரி சாரதா கோயில், ஹரநாடு அன்னபுரேஷ்வரர் கோயில் தரிசனம் செய்து கோவா சுற்றுலா தலங்களையும் சுற்றி காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு எண்கள்: பிறகு சுற்றுலா ரயில் கோவா மட்கானிலிருந்து டிசம்பர் 10 இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு டிசம்பர் 12 காலை 7:35 மணிக்கு மதுரை வரும். மதியம் 3:30 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி சேரும். இந்த சுற்றுலா ரயிலுக்கு மதுரை பகுதி பயணிகள் பயண சீட்டுகள் பதிவு செய்ய 82879 31977 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என ஐஆர்சிடிசி நிர்வாகம் தன்னுடைய அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications