முதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முதல்ல அபார்ஷன்.. அப்பறம்தான் கல்யாணம்" என்று பொய் சொல்லி, வெளிநாட்டு மாணவியை ஏமாற்றிய பிசினஸ்மேன் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனியை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. 28 வயதான இவர் ஒரு இளம் தொழிலதிபர்.

பெரிய அளவில் இறால் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த பிசினஸ் தொடர்பாக சில மாசத்துக்கு முன்பு துபாய் சென்றார்.

european student pregnancy and complaint against business man

போன இடத்தில் ஒரு மாணவியை சந்தித்தார். அவர் பெயர் உக்னே பெரேவேரி செவைத் என்பது. இவர் ஐரோப்பாவில் உள்ள லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர். 22 வயது பெண்ணான இவர், துபாயில் தங்கி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த பெண்ணை அங்கு சந்துள்ளார். உக்னேவை பார்த்ததுமே ருமேஸுக்கு பிடித்துவிட்டது. நல்ல நட்பு இருவருக்கும் வளர்ந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததால் உக்னே 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்தவிஷயம் வெளியே தெரிந்தால் விவகாரமாகிவிடும் என்று நினைத்த ருமேஸ், இந்தியாவிற்கு உக்னேவை வரவழைத்தார்.. எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்க வைத்தார்.

"முதலில் அபார்ஷன் செய்து கொள்.. அப்பறம் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று சொல்லி, கடந்த ஜுன் 21-ம் தேதி ஆயிரம்விளக்கு பகுதியில் ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து அந்த பெண்ணுக்கு அபார்ஷனும் செய்துள்ளார். இதற்கு ருமேஸின் அப்பாவும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

ஆனால் திரும்பவும் உக்னே 2 மாசம் கர்ப்பம் ஆனார். இதனால் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ருமேஸிடம் இளம்பெண் கேட்கவும், ருமேஸ் இதற்கு மறுத்ததுடன், ஆளே எஸ்கேப் ஆகிவிட்டார். நாடுவிட்டு நாடு நம்பி வந்தால், ஆள் தலைமறைவாகி விட்டதை கண்டு உக்னே அதிர்ந்து போய்விட்டார்.

அதனால் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசில் கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய ருமேஸ் மீது புகார் தந்துள்ளார். இதையடுத்து, ருமேஸின் அப்பாவிடம் விசாரணை நடத்தி வருவதுடன், ஓடிப்போன காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+