விஜய் வருகைக்காக சோபா வாங்கப்பட்டதா? சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த விசிக
சென்னை: விஜய் வருகை தருவதாக தகவல் வெளியான நிலையில், விசிக அலுவலகத்திற்கு புதிய சோபா சென்றது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், விசிக அலுவலக சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது தான். இது விஜய்க்காக வாங்கப்படவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் முதலில் விஜய்க்கு ஆதரவு அளித்தது. கம்யூனிஸ்டுகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லிக் உள்ளிட்ட கட்சிகள் யோசித்து முடிவு எடுப்பதாக கூறியிருந்தன.

இதற்கு மத்தியில் அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது. இந்த சூழலில் திடீரென கம்யூனிஸ்டு கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்தன. அதன்பிறகு விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் விஜய்க்கு ஆதரவு அளித்தன. இதன்பிறகே விஜய் முதல்வராக பதவியேற்றார்.
இதற்கிடையே விஜய் வருகை தருவதாக தகவல் வெளியான நிலையில், விசிக அலுவலகத்திற்கு புதிய சோபா சென்றது. இது அரசியல் ரீதியாக விமர்சனத்தை ஏற்படுத்தியது ஆனால் திருமாவளவன் இதற்கு தனது விளக்கத்தை அளித்து இருந்தார். திருமாவளவன் கூறுகையில், "விசிக அலுவலக சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது தான்.
இது விஜய்க்காக வாங்கப்படவில்லை. உதயநிதி, அதிமுகவில் உருவாகியுள்ள புதிய அணி அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிட்டே பேசினார்" என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் இந்த விவகாரம் அரசியல் விவகாரத்தில் விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. விஜய், அதிமுகவில் எடப்பாடி அதிருப்தி அணியினரை சந்திக்க சென்ற போது, இதே போல சோஃபா சிவி சண்முகம் அலுவலகத்திற்கு சென்றது.
இதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன. தமிழக அரசியல் களத்தில் இப்படி சோபா விவகாரம் ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை யுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்












Click it and Unblock the Notifications