சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலிஷா சொன்ன அதே "மாதம்".. துபாயில் நடந்தது என்ன? அண்ணாமலை சொன்னாரா? சல்லி சல்லியாக உடைத்த காயத்ரி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து இருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது, என்று கூறிவிட்டு காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

பூமியில் புதையும் ஜோஷிமத்! சிவலிங்கத்தில் விரிசல்.. மிக பெரிய அச்சுறுத்தல் என ஆச்சாரியார்கள் கருத்து பூமியில் புதையும் ஜோஷிமத்! சிவலிங்கத்தில் விரிசல்.. மிக பெரிய அச்சுறுத்தல் என ஆச்சாரியார்கள் கருத்து

காயத்ரி

காயத்ரி

கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு பாஜகவில் பிரச்சனைகள் நிலவி வருகின்றன. பெண்களுக்கு எந்த வகையில் அண்ணாமலை ஆதரவாக இருக்கிறார் என்ற கேள்வியை அவரிடம் கேட்க விரும்புகிறேன். திருச்சி சூர்யா - டெய்சி விவகாரத்தில் கூட சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்து வைத்தார். இந்த விவகாரம் வெளியே வந்த போது சூர்யாவை அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்த போது அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அண்ணாமலை, சூர்யாவின் பொறுப்பிற்கு வேறு ஒரு நிர்வாகியையும் நியமனம் செய்யவில்லை.

சூர்யா

சூர்யா

சூர்யா தொடர்ந்து கட்சி குறித்து தவறாக பேசி வருகிறார். டெய்சி - சூர்யா லீக்கான அதே மாதத்தில்தான் சூர்யா தன்னிடம் தவறாக பேசியதாக அலிஷா அப்துல்லா குற்றச்சாட்டு வைத்தார். அதே மாதத்தில்தான் இரண்டு சம்பவங்கள் பற்றியும் செய்தி வெளியானது. ஆனால் சூர்யா மீது அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சுமார் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். துபாய் ஹோட்டலில் நான் 150 பேருடன் இருந்ததாக அண்ணாமலை என்னைப்பற்றி தவறாக பேசி இருக்கிறார். துபாய் ஹோட்டலில் நான் திமுகவினருடன் இருந்ததாக கூறி இருக்கிறார்.

அசிங்கம்

அசிங்கம்

அங்கு நடந்ததை எல்லாம் சொன்னால் அசிங்கமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். இதை எல்லாம் எப்படி ஒரு கட்சித் தலைவர் பேச முடியும். அவர் பேசிய போதும் கட்சியில் நான் உறுப்பினராகத்தான் இருந்தேன். அண்ணாமலை என்னை பற்றி பேசி பிரபலம் அடைய முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு பாஜகவில் சமத்துவம் இல்லை, சம உரிமை இல்லை. பாஜக பெண்களுக்கு பாதுகாப்பது இல்லை. நான் திமுகவுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா? நான் துபாயில் என்ன செய்தேன் என்று நிரூபிக்க முடியுமா?

திமுக

திமுக

நான் திமுக நிர்வாகி ஒருவருக்கு வாழ்த்து சொன்னதாக சொல்கிறார். நான் திமுக நிர்வாகிக்கு பொது இடத்தில் பல அரசியல் தலைவர்களை சந்தித்த போது பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். அரசியல் நாகரீகம் கருதி நலம் விசாரித்தேன். திமுக நிர்வாகி என்பதால் அவரை நான் என்ன கத்தியால் குத்த முடியுமா? என்று காயத்ரி கேட்டுள்ளார். அதோடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக எம்பி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சனம் செய்து.. இதோ இவர் மட்டும் வாழ்த்து சொல்கிறார் பாருங்கள், திமுக ஸ்லீப்பர் செல் இவர் என்று விமர்சனம் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

English summary
Even after Alisha complaints Annamalai did not accept Trichy Surya resignation says Gayathri Raghuram .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X