துப்பாக்கி முனையிலும் கூட திமுக தொண்டராகவே மரணிப்பேன்.. பாஜகவுக்கு தாவமாட்டேன்: பூங்கோதை ஆலடி அருணா
சென்னை: துப்பாக்கி முனையிலும் திமுகவின் தொண்டராகவே மரணிப்பேனே தவிர பாஜகவுக்கு தாவ மாட்டேன் என்று திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம், பாஜகவுக்கு தாவியதைத் தொடர்ந்து பலருக்கும் அந்த கட்சி குறிவைத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவும் பாஜகவில் ஐக்கியமானார்.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட சிலரது பெயரை குறிப்பிட்டு பாஜகவுக்கு தாவப் போகிறார்கள் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக பூங்கோதை ஆலடி அருணா எச்சரிக்கை விடுத்த நிலையில் இது தொடர்பாக பதிவிட்ட பாஜகவினர் மன்னிப்பும் வருத்தமு தெரிவித்தனர்.

இதனை மேற்கோள்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூங்கோதை ஆலடி அருணா, மிக கேவலமான பொய் செய்திகளை பரப்புகின்றனர். திமுகவைத்தான் சுவாசிக்கிறேன்! துப்பாக்கி முனையில் நிறுத்தினாலும் நான் திமுகவின் தொண்டராக மரணிப்பேனே தவிர கட்சி மாறமாட்டேன் என ஆக்ரோஷமாக குறிப்பிட்டிருக்கிறார்.

பூங்கோதை ஆலடி அருணாவின் திட்டவட்டமான இந்த பதிவை திமுகவினர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி












Click it and Unblock the Notifications