இதுக்கு ஒரு எண்டே இல்லையா? எடப்பாடிக்கு சாதகமா வந்தாலும் இடியாப்ப சிக்கல்.. விளக்கும் பத்திரிகையாளர்
சென்னை : இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தாலும் கூட இடியாப்ப சிக்கல் தீராது என்கிறார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய மோதல் இன்று வரை விடாமல் தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தாலும், ஈபிஎஸ்ஸின் கையே ஓங்கிக் காணப்படுகிறது.
தற்போது பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தீர்ப்பும் எந்தவித தீர்வும் தராது என்கிறார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் பரபரப்பு வாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் அணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் இல்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என வாதங்களை வைத்தனர்.

வாபஸ் பெற தயார்
மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிடத் தயார், வழக்கையும் வாபஸ் பெறத் தயார் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததும் ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைக்கும்.

எம்.எல்.ஏ + எம்.பி பிரச்சனை
இந்நிலையில், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தாலும், இந்தச் சிக்கல் தீராது என்கிறார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன். இந்த வழக்கு விசாரணை தொடர்பாகப் பேசியுள்ள கோட்டீஸ்வரன், "இந்த வழக்கின் மூலம் ஒரு முழுமையான தீர்வு கிடைப்பது போல் தெரியவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தாலும் கூட நாங்கள் தான் ஜெயலலிதா வழியில், அவரால் அடையாளம் காட்டப்பட்டு வந்தோம் என்று மக்களிடம் ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்வார்கள். மக்களவை எம்.பியாக இருக்கும் ஓபி ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினரா, ஓபிஎஸ் பக்கம் இருக்கும் 4 எம்.எல்.ஏக்கள் அதிமுக உறுப்பினர்களா என்ற பிரச்சனையும் உள்ளது.

அதுவரை தொடரும்
இந்த விவகாரங்களில் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்ற சிக்கல்கள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி வசம் அதிகமான எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் இருந்தாலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் செல்வாக்கு இதுவரை தேர்தல் களத்தில் சோதித்துப் பார்க்கப்படவில்லை. தனித்தனியாக இருவரும் களத்தில் நிற்கும்போதுதான் யாருக்கு செல்வாக்கு என்பது வெளிப்படையாகத் தெரியவரும். அதுவரை இந்த குடுமிப்பிடி சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு ரவுண்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான பலன் ஏதோவொன்று கிடைத்து வருகிறது.

ஒவ்வொரு ரவுண்டிலும்
அதிமுக தலைமை அலுவலகம், அதிமுக சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை, கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் உரிமை, ஈபிஎஸ் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அவர் கையெழுத்திட்ட வேட்பாளர் ஒப்புகை படிவத்தையே தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இப்போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவும் கோர்ட் தடை விதிக்கவில்லை. இப்படி பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலையே தொடர்ந்து வருகிறது.

2026 வரை
ஓ.பன்னீர்செல்வம் வழக்காடு மன்றத்திற்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டு மக்கள் மன்றத்திற்குச் சென்றால் வேண்டுமானால் தீர்வு கிடைக்கலாம். அதிமுக 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. இந்த கோஷ்டி பூசலால் அதிமுக ஒன்றுமில்லாமல் போகும் என்ற நிலை வராது. இப்படியான போட்டி ஒரு ஜனநாயக கட்சியில் அவசியம் தான். யார் வீரியத்துடன் செயல்படுகிறார்களோ அவர்கள் அதிமுகவின் தலைமைப் பதவியைப் பிடிப்பார்கள். அது ஈபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸோ என்பது 2024 தேர்தலின்போது ஓரளவுக்குத் தெரியவரும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தெளிவாகிவிடும்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?











Click it and Unblock the Notifications