நீதிபதிகளை கூட ட்ரோல் செய்கிறார்கள்.. விடக்கூடாது.. மாதம்பட்டி வழக்கில்.. எட்டிப்பார்த்த விஜய் கேஸ்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார்.. இப்போதெல்லாம் நீதிபதிகள் கூட இணையத்தில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். இதை விடக்கூடாது. இது போன்ற விஷயங்களை சீரியஸாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தவெக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் வைத்தார்.

விஜய் மீது கடும் விமர்சனம்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் உத்தரவில், கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார் தேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீதி கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். ஏதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது, என்று கடுமையாக தாக்கி இருந்தார்.
கிண்டல்
இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் எல்லோரையும் சீண்டுவது போல நீதிபதியையும் சீண்டி போஸ்டுகளை செய்தனர். நீதிபதியை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டுகளை செய்தனர். இப்படி நீதிபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட மூவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில்தான் இன்று மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார்.. இப்போதெல்லாம் நீதிபதிகள் கூட இணையத்தில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். நீதிபதிகளை கூட சமூக வலைதள ட்ரோல்கள் விட்டுவைக்கவில்லை. இதை விடக்கூடாது. இது போன்ற விஷயங்களை சீரியஸாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரபல சமையல்கலைஞரும் நடிகருமான 'மாதம்பட்டி' டி. ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டாவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் விதமாக ஊடகங்களில் பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான கருத்துகளைத் தெரிவிப்பதைத் தடுக்க இந்த வழக்கை அவர் தொடுத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் - க்ரிசில்டா கேஸ்
முதன்மை நீதிபதி என். செந்தில்குமார் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மாதம்பட்டி ரங்கராஜை மணந்ததாகக் கூறும் க்ரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக அவதூறான செய்திகளை உருவாக்குவது, எழுதுவது, அச்சிடுவது, வெளியிடுவது, ஒளிபரப்புவது, விநியோகிப்பது, பதிவிடுவது, பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
ரங்கராஜின் தனிப்பட்ட குணம், தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் பிஸ்னஸ் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் அவரது வழக்கை மற்றும் நற்பெயருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவதூறு விளைவிக்கும் எந்தவொரு வீடியோ, ரீல்ஸ், புகைப்படங்கள், தலைப்புகள் அல்லது ஆடியோ காட்சிகளை பதிவிடுவதிலிருந்தும் அவர் தடுக்கப்பட வேண்டும் என்று ரங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
க்ரிசில்டா பதிவுகளை நீக்க வேண்டும்
மேலும் க்ரிசில்டா ஜூலை 26, ஜூலை 30, ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 30, 2025 அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டிக்கு எதிராகப் பதிவிடப்பட்ட அவதூறு உள்ளடக்கங்களை நீக்கவும், மாதம்பட்டி டேக்குகளை நீக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரியுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளரால் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் காரணமாக மட்டுமே ₹12 கோடி ஒப்பந்தங்களை நிறுவனம் இழந்ததாக எப்படி கூற முடியும் என்று நீதிபதி கேட்டபோது, வேறு காரணம் எதுவும் இல்லை என்று ராமன் பதிலளித்தார். அவரது சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பிறகுதான் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், தனது கட்சிக்காரர் காரணமாக மட்டுமே ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதை நிறுவனம் நிரூபிக்க வேண்டும் என்று பிரபாகரன் சவால் விடுத்தார். "நான் நீதி மற்றும் என் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தைக்காகப் போராடுகிறேன். நான் ரங்கராஜுக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் பதிவு செய்துள்ளேன். இந்த வழக்கு கிரிமினல் வழக்கிற்கு ஒரு வணிகச் சாயம் பூசவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications