ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான மூச்சுத்திணறல்.. "காலையில் கூட பேப்பர் படித்தார்" உதவியாளர் தகவல்!
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சிவா தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சிவா ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான மூச்சுத்திணறல் மட்டுமே உள்ளது. ஆனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்படவில்லை என்றும், இன்று காலையில் கூட பேப்பர் படித்ததாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அதில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43, 923 வாக்குகளையே பெற்றார்.

மருத்துவமனையில் அனுமதி
இதனைத் தொடர்ந்து மார்ச்10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கொண்டனர். இந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு
அப்போது அவருக்கு லேசான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமைக்ரான் பாதிப்பு
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.

காலையில் பேப்பர் படித்தார்
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து அறிந்துகொள்ள ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவரது உதவியாளர் சிவாவை தொடர்பு கொண்டோம். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை பற்றிய கேள்விக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அவருக்கு லேசான மூச்சுத்திணறல் மட்டுமே உள்ளது. மற்றபடி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை. இன்று காலையில் கூட பேப்பர் படித்தார் என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications