தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்! -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள மூத்த தலைவர்களை கே.எஸ்.அழகிரி மதிப்பதேயில்லை என்றும் அவரை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். கட்சி கூட்டங்களுக்கு முறையாக யாரையும் அவர் அழைப்பதே கிடையாது என்றும் 5 ஆண்டுகளாக தலைவராக இருப்பதால் அவருக்கு சோர்வும், சுணக்கமும் ஏற்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை வேலை போன போலீஸ் அதிகாரியை கட்சியின் தமிழக தலைவராக நியமித்திருக்கிறார்கள் என்றும் அவர் தினமும் ஒரு பொய்யை சொல்லி வருகிறார் எனவும் அண்ணாமலையை தனது பாணியில் சாடினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி கூட சரியாக கொடுப்பதில்லை என்றும் மோடியை திமுக கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்ற முறையில் அழகிரி தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்வதே கிடையாது எனவும் குற்றஞ்சாட்டினார்.
இதனால் கே.எஸ்.அழகிரியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்றும் இதுவரை 3 முறையில் கட்சியின் டெல்லி மேலிடத்திடம் அழகிரியை மாற்றுமாறு முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கண்டிப்பாக அழகிரியை மாற்றுகிறோம் என தங்களுக்கு கட்சி மேலிடம் உறுதி கொடுத்திருப்பதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார். ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி என பலரும் அழகிரி மீது புகார் கூறியிருப்பதாக தெரிவித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்றார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசி அவரது ஆதங்கத்தை சரி செய்வோம் என 2 நாட்களுக்கு முன்னர் தான் கே.எஸ்.அழகிரி திருப்பூரில் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் பார்த்தால் அழகிரி மீது அனல் கக்கியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications