"கோமளவள்ளி (எ) அம்மு!" ஜெயலலிதாவையே சைலண்டாக்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்! ஸ்டன்னான சோனியா! பிளாஷ்பேக்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவமானப்படுத்தும் வகையில் பிரஸ் மீட் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கோமளவல்லி என்கிற அம்மு என கடுமையாக விமர்சித்து பேட்டிக் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் தைரியத்தை பார்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களே ஆச்சரியப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அவரது தைரியமான பேச்சுக்கள் என சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரியாரின் பேரன், ஈவிகே சம்பத்- சுலோச்சனா தம்பதியின் மகனான ஈவிகேஎஸ் இளங்கோவன், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு ஒரு மாதமாக உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்று முதல் தொடர்ந்து மோசமடைந்தது. அவருடைய இதய துடிப்பு குறைந்துக் கொண்டே சென்றது. அது போல் அவருடைய ரத்த அழுத்தமும் குறைந்தது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.
அவரது ரத்த அழுத்தத்தையும் பல்ஸையும் சீராக்க மருத்துவர்கள் போராடினர். ஆனாலும் அவர்கள் அளிக்கும் சிகிச்சையை அவரது உடல் ஏற்கவில்லை என மருத்துவர்கள் கைவிரித்தனர். எனினும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்து அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலால் காங்கிரஸ் தொண்டர்கள் கதறியபடியே அவருடைய வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் சென்றுள்ளனர். அவரது இறப்புக்கு ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர். அதே நேரம் அரசியலில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் யார் ஆலோசனைகளை வழங்கினாலும் வரவேற்பார். அது போல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்டுவதில் வல்லவர். இப்படி பல தலைவர்கள் இளங்கோவனை பாராட்டி வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது இளங்கோவனின் தைரியத்திற்கு உதாரணமாக பழைய சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அவர் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது. அதே வேளையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த அரசியலில் ஜெயலலிதா நீந்தி வெற்றி பெற்றார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. இந்த இணைப்பு மதுரையில் நடந்தது. இந்த விழாவிற்கு சோனியா காந்தி வருகை தந்திருந்தார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை மக்கள் விரோத அரசு என விமர்சித்த சோனியா, இனி எந்தக் காலக்கட்டத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சூளுரைத்தார்.
இதனால் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் டெல்லிக்கு சென்ற ஜெயலலிதா அங்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக துடிக்கிறார் அண்டோனியா அல்பினா மையினோ. அது நடக்காது என்றார்.
அதாவது சோனியாவின் இயற்பெயர்தான் ஜெயலலிதா உச்சரித்த அண்டோனியா என்ற அந்த நீண்ட பெயர்! இதைத் தொடர்ந்து தமிழகம் வந்த ஜெயலலிதா அப்போதும் சோனியாவை விமர்சித்திருந்தார். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி ஆவேசமாக இருந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பத்திரிகையாளர்கள் கூட்டினார்.
அப்போது அவர் கூறுகையில் கோமளவல்லி (எ) அம்மு (எ) ஜெயலலிதா என இளங்கோவன் கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது இந்த பதிலடியை கேட்டு சோனியாவை விமர்சிப்பதை கூட ஜெயலலிதா அப்போது நிறுத்தி விட்டார் என சொல்வதுண்டு. ஜெயலலிதாவை கண்டாலே அஞ்சும் சிலருக்கு மத்தியில் இளங்கோவனின் விமர்சனம் அதிர வைத்தது. இதனாலேயே சோனியாவின் குட்வில் புக்கில் ஈவிகேஎஸ் இருந்தார் என சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications