திடீர்னு கறிகடையில் புகுந்து அரிவாளை எடுத்த நம்ம ஜெயக்குமார்.. அண்டாவை திறந்து.. பரபர வண்ணாரப்பேட்டை
கறிக்கடையில் நுழைந்து வாக்கு சேகரித்தார் ஜெயக்குமார்
சென்னை: தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென அரிவாளை எடுத்தார்.. பீஸ் பீஸ்ஸாக மட்டனை வெட்டினார்.. அண்டாவை திறந்து பார்த்தார்.. துணி தைத்து தந்தார்.. இறுதியில் அனைவரிடமும் வாக்கு சேகரித்தார்.. இதனால் வண்ணாரப்பேட்டையே இன்று படுபிஸியாகிவிட்டது.
நகர்ப்புற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.. ஆளுக்கு ஒரு பக்கம் தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த முறை திமுக மட்டுமே கூட்டணியாக போட்டியிடுகிறது.. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகள் தனித்தனியாகவே களம் காணுகின்றன..

அரிவாள்
பெரும்பாலான இடங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் அனைத்து கட்சிகளுக்குமே இருப்பதால், வாக்காளர்களை கவரும் வகையில், தங்களுக்கு தெரிந்த யுக்தியை கையில் எடுத்து வருகின்றனர்.. மக்களை கவரும் வகையில், பல்வேறு உத்திகளை செய்து வாக்கு கேட்டு வருகின்றனர்.. அந்த வகையில், மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கையில் அரிவாளையே எடுத்துவிட்டார்.

எப்படி?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 48 மற்றும் 53 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது ஒரு வீட்டிற்கு சென்ற அவர், அங்குள்ள பெண்மணி டைலரிங் மிஷினில் துணி தைத்து கொண்டிருப்பதை பார்த்தார்.. உடனே இவரும் அந்த மிஷினில் உட்கார்ந்து துணி தைத்தார்.. தைத்து முடித்ததும் "எப்படி?" என்று அங்கிருந்தோரை கேட்டார்.. அவர்கள் அனைவரும் கைகளை தட்டினார்கள்.. பிறகு அந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மட்டன்
இதேபோல் கடைதெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ஜெயக்குமார், அங்கிருந்த மட்டன் கடைக்குள் நுழைந்துவிட்டார்.. அரிவாளை எடுத்து மட்டனை துண்டு துண்டாக வெட்டினார்.. ஆனால், அந்த மட்டன் ஏற்கனவே வெட்டப்பட்டுதான் இருந்தது.. அதில் இருக்கும் துண்டை எடுத்து, இவர் இன்னும் சிறிய துண்டாக வெட்டினார்.. பிறகு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகளை கழுவி கொண்டார்.. கறி வெட்ட வந்த ஜெயக்குமாருக்கு அந்த பகுதியில் உள்ள பெண்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இறுதியில் அனைவரிடம் வாக்கு சேகரித்தார்.

சாம்பார் அண்டா
பிறகு அந்த சாலையில் தள்ளுவண்டி கடை ஒன்று இருந்தது.. அங்கே நிறைய பேர் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.. அங்கு சென்ற ஜெயக்குமார், டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த சாம்பார் அண்டாவை திறந்து பார்த்தார்.. பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையெல்லாம் பார்த்து, கடை குறித்து விசாரித்தார்.. அந்த கடையில் இருந்த அத்தனை பேரிடமும் வாக்கு சேகரித்தார்..

பாதுகாப்பு
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, வழக்கம்போல் திமுகவை விமர்சித்தார்.. அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்கவே திமுகவினர் தயங்குகிறார்கள், அதனால், அதிமுக மகத்தான வெற்றியை பெறும், அதிமுக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் இப்போது தனி மனிதனுக்கே பாதுகாப்பு இல்லை என்று லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லிவிட்டு, அங்கிருந்த மக்களிடம் வாக்கு கேட்டுக் நகர்ந்து சென்றார் ஜெயக்குமார்..!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications